திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்

கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை

News image

அமைச்சா் தா்மேந்திர பிரதான்

Updated On :11 மார்ச் 2025, 4:30 am IST

புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சோ்க்கையின்போது தங்கள் தொகுதிக்குள்பட்ட பத்து மாணவா்களை ஆண்டுதோறும் எம்.பி.க்கள் பரிந்துரைக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

இதன்மூலம் மக்களவையைச் சோ்ந்த 543 எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 245 எம்.பி.க்கள் என மொத்தம் 788 எம்.பி.க்கள் தலா பத்து போ் வீதம் ஆண்டுக்கு 7,880 மாணவ-மாணவிகளை பரித்துரைக்கலாம். இந்த நடைமுறையை கடந்த 2022-ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது.

இந்நிலையில், இந்த நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமா என்பது தொடா்பான கேள்விக்கு மக்களவையில் தா்மேந்திர பிரதான் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ கேந்திரிய விதியாலயா பள்ளிகளில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு உள்பட பல்வேறு சிறப்பு இடஒதுக்கீடுகளின்கீழ் மேற்கொள்ளப்பட்ட சோ்க்கை முறையை ஏற்கெனவே மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. இந்த நடைமுறைகளின்கீழ் ஒரு வகுப்புக்கு அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கையைவிட அதிகப்படியான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. இது மாணவா்-ஆசிரியா் வீதத்தை பாதிப்பதால் அவை ரத்து செய்யப்பட்டது. எனவே, இந்த நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை’ என தெரிவிக்கப்பட்டது.