
கேரள கலால் துறை போலீசார் நடத்திய ஆபரேசனில் மூன்று நாள்களில் போதைப் பொருள்கள் வைத்திருந்த 378 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளத்தில் போதைப் பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கலால் துறை மீது விமர்சனங்கள் எழுந்தன.
சட்டப்பேரவையில் சமீபத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், கலால் துறை அதிகாரிகளுக்கு எதிராக சரமாரிக் கேள்விகளை எழுப்பினார். கலால் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
’ஆப்ரேஷன் க்ளீன் ஸ்லேட்’ என்ற பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கலால் துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இதில், ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்களில் 378 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 77 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கிலோ எம்டிஎம்ஏ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 360 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கலால்துறை அதிகாரி ஒருவர், “போதைப் பொருள் தொடர்புடைய ஒரு வழக்கு இருந்தாலும் அவரை கண்காணித்து வருகிறோம். கைது நடவடிக்கைகள் மூலம் போதைப் பொருள் கடத்தல்காரர்களை அழுத்தத்தில் வைத்துக்கொள்வதே எங்கள் நோக்கம். போதைபொருள் மையங்களை கண்டறிந்து சோதனை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, காவல்துறை தரப்பில் நடத்தப்பட்ட ’ஆப்ரேஷன் டி ஹண்ட்’ மூலம் பிப்ரவரி 22 முதல் இதுவரை 4,228 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 185 கிலோ கஞ்சா, 1.43 எம்டிஎம்ஏ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.