சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ரேவந்த் ரெட்டியுடன் திமுக தலைவர்கள் சந்திப்பு!

தெலங்கானா முதல்வரை திமுக தலைவர்கள் சந்தித்தது பற்றி..

News image
Updated On :13 மார்ச் 2025, 6:21 am

DIN

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தமிழக அமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டோர் வியாழக்கிழமை நேரில் சந்தித்தனர்.

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடா்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தென்மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் வருகிற மார்ச் 22 ஆம் தேதியன்று தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க தென்மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

தில்லியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டோர், கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரேவந்த் ரெட்டி, தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம், முதல்வர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்கிறேன், கட்சி மேலிட அனுமதி பெற்று கூட்டத்தில் பங்கேற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.