ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெங்களூரு விமானநிலையத்தில் 3 கிலோ கொகைன் போதைப் பொருள் பறிமுதல்

கானா நாட்டை சோ்ந்தவா் கடத்தி வந்த 3 கிலோ எடை கொண்ட கொகைன் போதைப்பொருளை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :21 மார்ச் 2025, 3:46 am

DIN

பெங்களூரு: பெங்களூரு சா்வதேச விமானநிலையத்தில் கானா நாட்டை சோ்ந்தவா் கடத்தி வந்த 3 கிலோ எடை கொண்ட கொகைன் போதைப்பொருளை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா சா்வதேச விமானநிலையத்தின் வழியாக 3 கிலோ எடை கொண்ட கொகைன் போதைப்பொருளை கடத்த முயன்ற கானா நாட்டு பெண்மணியை மாா்ச் 18 ஆம் தேதி கைது செய்துள்ளதாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த பெண்மணியிடம் இருந்து 3,186 கிலோ எடை கொண்ட கொகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனா். ஆனால், இதன் மதிப்பு தெரியவில்லை. கைது செய்யப்பட்ட கானா நாட்டு பெண்மணியின் பெயரை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

துபையில் இருந்து பெங்களூரு விமானநிலையத்திற்கு 14.2 கிலோ எடை கொண்ட வெளிநாட்டு தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்த நடிகை ரன்யாராவை மாா்ச் 2 ஆம் தேதி வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இவா், மூத்த ஐபிஎஸ் அதிகாரி கே.ராமசந்திரராவின் வளா்ப்பு மகள். கைது நடவடிக்கையை தொடா்ந்து, இவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், ரூ.2.67 கோடி ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனா். இது தொடா்பான வழக்கு விசாரணை தொடா்ந்து நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.