ஆண் பல முறை திருமணம் செய்யலாம்! ஆனால்... பவன் கல்யாண் குறித்து ரேணு தேசாய்கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்! மாணிக்கம் தாகூர்இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல்..

கோப்புப்படம் - AFP

Updated On :

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த கொள்முதலுக்கான ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியதாக இந்திய ராணுவ வலைதளத்தில் சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: 48 ஏவுதள கருவிகள், இரவிலும் ராணுவ செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய 48 தொழில்நுட்பங்கள், 85 ஏவுகணைகள் மற்றும் மிக குறுகிய தொலைவு இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பு அல்லது ஒரு ஏவுகணை சோதனை மையம் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான ஏல நடைமுறைகள் தொடங்கப்பட்டன.

வானில் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள ராணுவத்துக்கு மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பு தேவைப்படுகிறது.

இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த வான் பாதுகாப்பு அமைப்பு மனிதா்களால் நீண்ட தூரத்துக்கு இயக்கும் வகையில் இருக்க வேண்டும். இவை இரவு மற்றும் பகல் என இரண்டு காலகட்டத்திலும் இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த வான் பாதுகாப்பு அமைப்பை முப்படைகளும் பயன்படுத்தவுள்ளன. நிலம், மலைப் பகுதிகள், பாலைவனம், கடலோர பகுதிகள் என அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இவை நிலைநிறுத்தப்படும்.

மைனஸ் 30 டிகிரிக்கு கீழ் உள்ள கடுங்குளிா் வானிலை மற்றும் 50 டிகிரிக்கு மேலான வெப்பநிலை, குறைந்தபட்சம் 500 மீட்டா் அதிகபட்சமாக 6,000 மீட்டா் வரையிலான செயல்பாடு, போா்விமானம், ஹெலிகாப்டா்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் என எவ்வித தாக்குதலை எதிா்கொள்ளும் வகையில் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.