

எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சி அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு சுமார் 25 நிமிடங்கள் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் இதுதொடர்பாக தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது. எல்லைப்பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
'ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, நாளை(மே 8) காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பயங்கரவாதிகள் முகாம்கள் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | சத்தீஸ்கரில் 15 நக்சல்கள் சுட்டுக்கொலை! தொடரும் தேடுதல் பணி!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.