
புது தில்லி : நாட்டின் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவிருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு முதல், இந்திய எல்லைப் பகுதி நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் முப்படைத் தளபதிகளையும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவகாரங்கள் மற்றும் இந்தியா தரப்பிலிருந்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை சந்தித்து கலந்தாலோசனை நடத்தவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.