
புது தில்லி: பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் பேசியதாவது: “நமது 7 நகரங்களில் விமானப்படை தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட பெரும்பாலான ட்ரோன்களையும் ஆளில்லா சிறிய ரக விமானங்களையும் இந்திய வான் வெளி பாதுகாப்பு அமைப்புகளான ’பேச்சோரா’, ‘சமர்’ ஆகியவற்றால் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தப்பட்டன. இங்குள்ள அமைப்புகளுக்கு எவ்வித சேதமும் உண்டாகவில்லை”.
”இதனிடையே, இந்த தொடர் சண்டையில் இந்திய விமானப்படையால் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்குமொரு உத்தியாக சிவில் விமானங்களை வானில் இயக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்தது. அப்பாவி மக்களின் உயிரை பொருட்படுத்தாமல், பாகிஸ்தான் சிவில் விமானங்களை பறக்கவிட்டது. எனினும், பொறுமை காத்த நமது வீரர்கள் மிக துல்லியமாக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பாணியில் எதிரி இலக்கை தாக்கினர்.
நாம் மோதுவது பாகிஸ்தான் ராணுவத்துடனோ அந்நாட்டிலுள்ள வேறெவருடனோ அல்ல, இந்த சண்டை முழுக்க முழுக்க பயங்கரவாதிகளுடன் மட்டுமே” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.