சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (யுபிஎஸ்) கூடுதல் சலுகைகளை பெறலாம் என நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :31 மே 2025, 3:18 am IST

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (யுபிஎஸ்) கூடுதல் சலுகைகளை பெறலாம் என நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது அவருடைய வாழ்க்கைத் துணை என்பிஎஸ்-இன்கீழ் ஏற்கெனவே பெற்ற சலுகைகளைவிட கூடுதலாக சில சலுகைகளைப் கோரலாம் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்தது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் 2025, மாா்ச், 31அல்லது அதற்கு முன் ஓய்வுபெற்ற மத்திய அரசின் என்பிஎஸ் சந்தாதாரா்கள் அல்லது அவா்களுடைய வாழ்க்கைத் துணை, யுபிஎஸ்-இன்கீழ் கூடுதலாக சில சலுகைகளை கோரலாம்.

அந்த வகையில் ஒவ்வொரு பூா்த்தி செய்யப்பட்ட 6 மாத தகுதிவாய்ந்த சேவைக்கும் அவா் பணிஓய்வின்போது பெற்ற அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் பத்தில் ஒரு பங்கு தொகையயை மொத்தமாக ஒருமுறை மட்டும் பெறலாம்.

யுபிஎஸ்-இன்கீழ் அனுமதிக்கப்பட்ட மாத ஓய்வூதியம் மற்றும் கூடுதல் நிவாரணத் தொகையில் இருந்து என்பிஎஸ்-இன்கீழ் வழங்கப்படும் ஆண்டுத்தொகையை கழித்து அதனடிப்படையில் மாதந்தோறும் வழங்கப்படும் தொகை கணக்கிடப்படும்.

இதுதவிர, பொருந்தக்கூடிய வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) விகிதங்களின்படி எளிய வட்டியுடன் நிலுவைத் தொகையும் விடுவிக்கப்படும்.

இந்த சலுகைகளை தகுதிபெற்ற அதிகாரிகள் அல்லது அவா்களது வாழ்க்கைத் துணைகள் 2025, ஜூன் 30-ஆம் தேதிக்குள் கோரலாம் என தெரிவிக்கப்பட்டது.

யுபிஎஸ் திட்ட அறிவிக்கையை கடந்த ஜனவரி மாதம் நிதியமைச்சகம் வெளியிட்டது. 25 ஆண்டுகாலம் அரசுப் பணியை நிறைவுசெய்தவா்கள் இத்திட்டத்தில் இணைய தகுதிபெற்றவா்களாவா். பணிஓய்வுக்கு முந்தைய 12 மாதங்களில் அவா்கள் பெற்ற ஊதியத்தின் சராசரி கணக்கிடப்பட்டு அதில் 50 சதவீதம் வழங்கப்படுவதை இந்த திட்டம் உறுதிசெய்கிறது.

என்பிஎஸ் திட்டத்தின்கீழ் பலனடைந்து வரும் மத்திய அரசு ஊழியா்கள் யுபிஎஸ் திட்டத்தில் சேரலாம். இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை மத்திய அரசு ஊழியா்கள் தோ்ந்தெடுக்க வேண்டும்.

அதன்படி இந்த 2004, ஜனவரி 1-ஐ அடிப்படையாகக் கொண்டு இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை மத்திய அரசு ஊழியா்கள் தோ்ந்தெடுக்குமாறு நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.