

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்தது ஒரு வரலாற்று மாற்றம் என பாஜக தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் முதல்கட்டமாக நவ.6ல் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 65 சதவிகித வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிகாரில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்துள்ளதாக பாஜக தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரியின் எக்ஸ் பதிவில்,
பிரதமர் மோடியின் கீழ் 2014 முதல் நல்லாட்சிக்கான ஆதரவு இந்திய ஜனநாயகத்தில் ஒரு புதிய பழக்கமாக மாறியுள்ளது.
செவ்வாயன்று தற்காலிக தரவுகளைப் பகிர்ந்து கொண்ட தேர்தல் ஆணையம், பிகாரில் ஒட்டுமொத்தமாக 66.91 சதவிகித வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இது 1951ஆம் ஆண்டு நடந்த முதல் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு இதுவே அதிகபட்சமாகும். மாநில வரலாற்றில் அதிகளவிலான பெண் வாக்காளர் சதவிகிதத்தையும் பதிவு செய்துள்ளது.
நவம்பர் 6 ஆம் தேதி நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில், 61.56 சதவிகித ஆண் வாக்காளர்களும், பெண் வாக்காளர்கள் 69.04 சதவிகிதமாக வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவில், பெண் வாக்காளர்கள் மீண்டும் அதிக எண்ணிக்கையில் 74.03 சதவிகிதமாகவும், ஆண்கள் 64.1 சதவிகிதமாகவும் வாக்களித்தனர்.
முதல் மற்றும் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில் ஆண்கள் ஒட்டுமொத்தமாக 62.8 சதவிகிதமாகவும், பெண்கள் 71.6 சதவிகிதமாகவும் பதிவாகியுள்ளது.
முதல் கட்டத்தில் ஆண் வாக்காளர்களை விடப் பெண் வாக்காளர்கள் 7.48 சதவிகிதம் அதிகமாகவும், இரண்டாம் கட்டத்தில் ஆண்களை விடப் பெண் வாக்குப்பதிவு 9.93 சதவிகிதம் அதிகமாகவும் இருந்தது.
மாற்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று அவர் கூறினார். 2025 பிகார் தேர்தல்கள் சுதந்திரத்திற்குப் பிறகு "பாலினத்தை உள்ளடக்கிய" தேர்தலாக இருந்தன. பிகாரில் பெண்கள் தீர்க்கமாக வாக்களித்துள்ளனர் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: விஜய் ஹசாரே தொடரில் களமிறங்கும் ரோஹித் சர்மா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.