வெறும் 2 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் முன்னிலை! ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் 5-ல்!

காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளதைப் பற்றி...
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ்.
Updated on
1 min read

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் - இ - இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தான் போட்டிட்ட 6 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. அதேவேளையில், இந்தியா கூட்டணி 32 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மகாகத் பந்தன் கூட்டணியில் உள்ள முக்கியமான கட்சியான காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டு கிசன்கஞ்ச் மற்றும் பாகல்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

கிசன்கஞ்ச்சில் 24,058 ஓட்டுகள் வித்தியாசத்திலும், பாகல்பூரில் 4000 வாக்குகள் வித்தியாசத்திலும் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.

தனித்துப் போட்டியிட்டு களம் கண்ட அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் - இ - இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தான் போட்டிட்ட 6 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது.

ஜோகிஹாட், பஹதூர்கஞ்ச், தாக்கூர்கஞ்ச், அமோர், பைசி, கோச்தாமன் ஆகிய ஆறு தொகுதிகளிலும் ஏஐஎம்ஐஎம் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

அமோர் தொகுதியில் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், ஜோகிஹாட், கோச்தாமன் ஆகிய தொகுதிகளில் தலா 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், மற்ற தொகுதிகளில் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை பெற்றுள்ளது.

Summary

Congress leading in just 2 seats! Owaisi's AIMIM in 5!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com