திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்: மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்

"மக்கள்தொகை 2027' சுயகணக்கெடுப்புப் படிவத்தை பொதுமக்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்து மத்திய அரசின் கணக்கெடுப்பு முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 5:44 am IST

நமது சிறப்பு நிருபர்

"மக்கள்தொகை 2027' சுயகணக்கெடுப்புப் படிவத்தை பொதுமக்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்து மத்திய அரசின் கணக்கெடுப்பு முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பையொட்டி, குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனை தில்லியில் உள்ள அவரது மாளிகையில் இந்திய மக்கள்தொகை தலைமைப் பதிவாளர் மற்றும் ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண், இந்திய மக்கள்தொகை தலைமைப் பதிவாளர் அலுவலக துணை தலைமை இயக்குநர் விஸ்வஜித் தாஸ் ஆகியோர் புதன்கிழமை சந்தித்தனர்.

அப்போது, 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான சுய கணக்கெடுப்புப் படிவத்தை இணையவழியில் குடியரசு துணைத் தலைவர் பூர்த்தி செய்தார்.

மத்திய அரசின் "எண்ம இந்தியா' முன்முயற்சியுடன் "2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு' மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கை தரம், செயல்திறன், தரவு சேகரிப்பில் காலந்தவறாமை, தகவல் பகிர்வில் விரிவான எண்மத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முன்முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தனது சுயகுறிப்பு வழங்கல் விவரம் மற்றும் படத்தை குடியரசு துணைத் தலைவரின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; அனைவரும் சுய கணக்கெடுப்பு நடவடிக்கையில் பங்கேற்று, தத்தமது மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தால் அறிவிக்கப்பட்ட காலத்துக்குள் https://se.census.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது மாளிகையில் இந்திய மக்கள்தொகை தலைமைப் பதிவாளர் மற்றும் அதிகாரிகள் சந்தித்து அவரது சுயவிவரக் குறிப்புகளை இணைய வழியில் பதிவு செய்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.