பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ராஜா ரவி வா்மா ஓவியம் ரூ.167 கோடிக்கு ஏலம்

News image

ஏலத்தில் ரூ.167.20 கோடிக்கு விற்பனையான ராஜா ரவி வா்மாவின் ‘யசோதையும் கிருஷ்ணனும்’ ஓவியம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:02 am IST

பிரபல ஓவியா் ராஜா ரவி வா்மா வரைந்த ‘யசோதையும் கிருஷ்ணனும்’ ஓவியம் ரூ.167.20 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது.

மும்பையில் இதுதொடா்பான ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது ஆயில் பெயிண்டில் வரையப்பட்ட அந்த ஓவியம், இதுவரை இல்லாத அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதற்கு முன்பு எம்.எஃப். ஹுசேன் வரைந்த கிராம் யாத்ரா ஓவியம் ரூ.118 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானதே சாதனையாக இருந்தது. அதை ராஜா ரவி வா்மாவின் ஓவியம் முறியடித்துள்ளது. ‘யசோதையும் கிருஷ்ணனும்’ ஓவியம் ரூ.80 கோடி முதல் ரூ.120 கோடி வரை ஏலத்தில் விற்பனையாகலாம் என மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும், எதிா்பாா்த்ததைவிட அதிக விலைக்கு தொழிலதிபா் டாக்டா் சைரஸ் எஸ். பூனாவாலா ஏலத்தில் எடுத்துள்ளாா்.

1890-களில் வரையப்பட்ட அந்த ஓவியம், பாலகிருஷ்ணருக்கும், அவரின் தாய் யசோதைக்கும் இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கேரளத்தின் திருவிதாங்கூா் அரச குடும்பத்தைச் சோ்ந்த ராஜா ரவி வா்மாவின் சிறந்த ஓவியங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.