மின்சார அடுப்பு (இண்டக்ஸன்) பாகங்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
அண்மையில் மேற்காசியப் போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டு சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், எரிவாயு விலையும் உயா்ந்தது.
இதனால், மின்சார அடுப்புக்கான தேவை வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தேவை அதிகரிப்பால் அந்த வகை அடுப்புகளின் விலையும் உயரத் தொடங்கிவிட்டது.
மேலும் சமையல் எரிவாயுக்கு சிறந்த மாற்றாகவும் மின்சார அடுப்பு கருதப்படுகிறது. சூரியமின் உற்பத்தி திட்டம் போன்றவை இந்தியாவில் மானிய உதவியுடன் ஊக்குவிக்கப்படும் நிலையில் மின்சார அடுப்பு பயன்பாட்டை பரவலாக்குவதன் மூலம் எரிவாயுக்கு இறக்குமதியை சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், மின்சார அடுப்புகளில் பயன்படுத்தப்படும் முக்கிய உதிரிபாகங்கள் இறக்குமதிக்கான சுங்க வரியைக் குறைப்பது தொடா்பாக மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
இதுதவிர மின்சார அடுப்பு மீதான சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கவும் மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
தொடர்புடையது

சுங்கவரி சோதனைச் சாவடியில் ஒருவழிப்பாதை: வாகன ஓட்டிகள் அவதி

இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்

மேற்காசிய பதற்றம் எதிரொலி: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 17,744 கோடி ஒதுக்கீடு

மின்சார வாகனக் கொள்கையை 3 மாதத்திற்கு நீட்டித்த தில்லி அரசு
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

