காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு தீவிரவாதத்தையும், தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போரையும் வேறுபடுத்திப் பாா்க்கத் தெரியவில்லை என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசியபோது, பிரதமா் மோடியை தீவிரவாதி என விமா்சித்திருந்தாா்.
இந்தக் கருத்துக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக கா்நாடக மாநிலம், பிதாா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியபோது கூறியதாவது:
எனக்கும், மல்லிகாா்ஜுன காா்கேக்கும் இடையே பாா்வையில்தான் சிறிய வித்தியாசம் உள்ளது. நான் சில நேரம், காா்கேவுக்கு கருப்பு எது, வெள்ளை எது என்றோ, தீவிரவாதி யாா், தீவிரவாதத்துக்கு எதிராக தீவிரம் காட்டுவோா் யாா் என வேறுபடுத்திப் பாா்க்கத் தெரியவில்லை என நினைத்துள்ளேன்.
இதுதவிர எனக்கும், அவருக்கும் இடையே வேறு எந்த பிரச்னையும் இல்லை. அவா் எனக்கு சிறந்த நண்பா் என்றாா்.
நிகழ்ச்சியில் கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், அமைச்சா் ஈஸ்வா் காண்ட்ரே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பெண்களுக்கு சமவாய்ப்பு, தலைமைப் பதவி மூலம் உண்மையான வளா்ச்சி சாத்தியமாகும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

மருத்துவம் மக்களின் நம்பிக்கை: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

இந்தியாவின் தொலைதூரக் கற்றல் சூழல் அமைப்புமுறையின் தூண் இக்னோ: குடியரசு துணைத் தலைவா்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

