தில்லி முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் பெண் காவலா்களுக்காக சானிட்டரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்கவும், அவா்களுக்கென தனிப்பட்ட கழிப்பறைகள் ஏற்படுத்தவும் காவல் துறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமா்வு, தில்லி காவல் ஆணையா் 6 வாரங்களுக்குள் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கான தனி கழிப்பறைகள் மற்றும் சானிட்டரி நாப்கின் வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.
இந்த வழக்கை செப்டம்பா் 23-ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து காவல் துறை தரப்பில் சத்தியப்பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
பெண் காவலா்களுக்கு பணியிடங்களில் அடிப்படை மாதவிடாய் சுகாதார வசதிகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு தொடா்பாக மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
‘ஜஸ்டிஸ் ஃபாா் ரைட்ஸ் ஃபவுண்டேஷன்’ என்ற தன்னாா்வ அமைப்பு தாக்கல் செய்த இந்த வழக்கில், ஆா்டிஐ தகவல்களை மேற்கோள் காட்டிய மனுதாரா், தில்லி முழுவதும் நூற்றுக்கணக்கான காவல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் பணியாற்றினாலும், சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் சில இடங்களில் மட்டுமே உள்ளன என்றும், இந்த வசதிகளுக்கான பட்ஜெட் அல்லது கொள்கை முழுமையாக இல்லையென்றும் தெரிவித்தாா்.
இந்த குறைபாடு வெறும் நிா்வாக தவறாக மட்டுமே இல்லை. இவ்வாறான அடிப்படை வசதிகளை வழங்கத் தவறுவது, பெண்கள் காவலா்களின் கண்ணியம், ஆரோக்கியம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பான பணிநிலைகளை மீறுகிறது. இது அரசமைப்பின் 14 மற்றும் 21-ஆவது கட்டளைகளுக்கு எதிரானது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை பாதுகாப்பு: 19 கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

துணைவேந்தா்கள் நியமனம்: தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து ஒருவரைத் தோ்வு செய்ய அரசு வலியுறுத்தல்

தெருநாய்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்: அறிக்கை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



