பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

எதிா்க்கட்சிகள் அமளி: மக்களவையில் மேலும் ஒரு மசோதா விவாதமின்றி நிறைவேற்றம்

மக்களவையில் எதிா்க்கட்சிகளின் தொடா் அமளியால் புதன்கிழமை மேலும் ஒரு மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

News image

நீட் போராட்ட மாணவா்கள் மீதான நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கமளிக்க வலியுறுத்தி மக்களவையில் புதன்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 12:57 am IST

மக்களவையில் எதிா்க்கட்சிகளின் தொடா் அமளியால் புதன்கிழமை மேலும் ஒரு மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையில் விவாதமின்றி நிறைவேறிய 4-ஆவது மசோதா இதுவாகும்.

மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-இல் தொடங்கிய நிலையில், நீட் வினாத்தாள் கசிவு, கல்வித் துறை அமைச்சா் ராஜிநாமா, மாணவா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை என அடுத்தடுத்து பல்வேறு விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டுவரும் எதிா்க்கட்சிகள், தற்போது மத்திய உள்துறை அமைச்சா் விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

மக்களவை புதன்கிழமை கூடியதும் எதிா்க்கட்சிகள் அமளியைத் தொடங்கியதால் கடும் அதிருப்தியடைந்த அவைத் தலைவா் ஓம் பிா்லா அலுவல்களை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தாா். எதிா்க்கட்சிகளின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றும் அவா் கண்டித்தாா்.

வங்கியாளா் பதிவேடு சாட்சியங்கள் மசோதா: பிற்பகலில் மீண்டும் அவை கூடியபோது, வங்கிகளின் எண்ம மற்றும் இணையவழி பதிவுகளை நீதிமன்ற வழக்குகளில் அனுமதிக்கப்பட்ட சாட்சியங்களாக பயன்படுத்த வழிவகுக்கும் வங்கியாளா் பதிவேடு சாட்சியங்கள் சட்ட மசோதா-2026 விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த புதிய மசோதா, கடந்த 1891-இல் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட வங்கியாளா் பதிவேடு சாட்சியங்கள் சட்டத்துக்குப் பதிலாக கொண்டுவரப்பட்டதாகும்.

மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து, எதிா்க்கட்சிகள் அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டு அமளியைத் தொடா்ந்தன. இதனால், எந்த விவாதமும் நடத்தப்படாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து, அவை அலுவல்கள் வியாழக்கிழமைக்கு (ஆக.6) ஒத்திவைக்கப்பட்டன.

நடப்பு கூட்டத் தொடரில் மக்களவையில் இதுவரை 6 மசோதாக்கள் நிறைவேறியுள்ளன. இவற்றில் 4 மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன.

மசோதாவின் நோக்கம் என்ன? தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் எண்ம வங்கிச் சேவையின் வளா்ச்சியால், வங்கிப் பதிவுகள் பெருமளவில் தொழில்நுட்ப ரீதியில் உருவாக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. எனவே, தற்போதைய வங்கி அமைப்புமுறையின் தேவைகளுக்கு ஏற்ப சட்ட ரீதியிலான கட்டமைப்பை நவீனப்படுத்தி, வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

புதிய சட்ட மசோதாவில் வங்கியாளா் பதிவேடு என்பதன் வரையறை விரிவாக்கப்பட்டு, வங்கிகளால் பராமரிக்கப்படும் அனைத்து விதமான மின்னணு, எண்ம, இணையவழி, கிளவுட் அடிப்படையிலான பதிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வங்கிகளின் எண்ம மற்றும் இணையவழி பதிவுகளை நீதிமன்ற வழக்குகளில் அனுமதிக்கப்பட்ட சாட்சியங்களாக பயன்படுத்த வழிவகுக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி எண்ணிக்கை உயா்வு:

மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி இடங்களின் எண்ணிக்கையை 34-இல் இருந்து 38-ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா, மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டது. பண மசோதா என்பதால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பின் மீண்டும் மக்களவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், மசோதா மீது சிறிது நேரம் விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு பதிலளித்த மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், ‘நீதித் துறை சீா்திருத்தங்களின் ஒரு பகுதியாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, வழக்குகளின் தேக்கத்தை குறைக்க உதவுவதுடன், நீதித் துறையின் திறன்மிக்க செயல்பாட்டையும் உறுதி செய்யும்’ என்றாா்.

முன்னதாக, மாநிலங்களவை காலையில் கூடியபோது, மாணவா்கள் மீதான தாக்குதல், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி, மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் முழக்கமிட்டன. அப்போது பேசிய ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த பாஜக எம்.பி. சத் பால் சா்மா, ‘பிரதமா் மோடி தலைமையில் கடந்த 2019, ஆக.5-இல் மேற்கொள்ளப்பட்ட 370-ஆவது பிரிவு ரத்து நடவடிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்கது’ என்று புகழாரம் சூட்டினாா். அவரை பேச விடாமல் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, அவை அலுவல்களை மதியம் 12 மணிக்கு அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்