வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

6 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் பயணச் செலவு ரூ. 550 கோடியா?

2026 ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின் செலவு குறித்து...

News image

பிரதமா் மோடி - கோப்புப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:12 pm IST

பிரதமர் நரேந்திர மோடி இந்தாண்டில் இதுவரையில் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணங்களின் செலவுகள் ரூ. 74.5 கோடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் இதுவரையில் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவினம் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் பவித்ரா மார்கெரிதா எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.

மாநிலங்களவையில் அவர் தெரிவித்ததாவது, "2026 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி இதுவரையில் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணங்களின் செலவு ரூ. 74.58 கோடி. இந்தாண்டு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 நாடுகளில் நார்வே பயணத்துக்குத்தான் அதிகபட்சமாக ரூ. 17.46 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக இஸ்ரேலுக்கு ரூ. 11.92 கோடியும், சீஷெல்ஸுக்கு ரூ. 8.22 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

மேலும், 2025-ல் பிரதமர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக ரூ. 180 கோடிக்கு அதிகமாகவும், 2024-ல் ரூ. 109 கோடியும், 2023-ல் ரூ. 93 கோடியும், 2022-ல் ரூ. 55 கோடியும், 2021-ல் ரூ. 36 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. 2021 முதல் இன்றுவரையில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ. 550 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அதே சமயம், ஜூலை 2021 முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களின்போது, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, குறைகடத்திகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுகாதாரம், கல்வி, விவசாயம், விண்வெளி ஒத்துழைப்பு, காலநிலை நடவடிக்கை ஆகியவற்றை உள்ளடக்கிய துறைகளில் 316 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மற்றும் உடன்படிக்கைகளும் கையெழுத்திடப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் 381.8 பில்லியன் டாலர் அளவில் மொத்த அந்நிய நேரடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.

Summary

PM Modi's foreign visits cost over Rs 74.58 crore so far in 2026; over Rs 550 crore spent since 2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.