செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

குஜராத்தின் மர்ம கிணறு! 5 நாள்கள் தளும்பிக்கொண்டே இருந்ததன் பகீர் பின்னணி!

குஜராத்தில் உள்ள மர்ம கிணறு தொடர்ந்து 5 நாள்கள் தண்ணீர் தளும்பிக்கொண்டே இருந்ததன் பின்னணி பற்றி..

மர்ம கிணறு

மர்ம கிணறு

Published On :

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்துக்கு அருகே உள்ள கிராமத்தின் பண்ணைக் கிணறு ஒன்று மிக அபூர்வமாக கடந்த ஐந்து நாள்களாக தண்ணீர் தளும்பிக் கொண்டே இருந்ததால் அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

மோர்பி தாலுகாவில் அடங்கிய விர்பர்தா கிராமத்தில்தான் இந்த அதிசயக் கிணறு அமைந்துள்ளது. முதலில், கிணற்றில் இருந்த தண்ணீர் திடிரென தளும்பத் தொடங்கியதைப் பார்த்தும் முதலில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனராம். ஆனால், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அதுபற்றி கிராமத்தினருக்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 2ஆம் தேதிதான் முதன்முதலில் கிணறு தளும்பத் தொடங்கியிருக்கிறது. அதாவது தண்ணீர் தளும்பி கிணற்றுக்கு வெளியே வந்து விழுவதை கிராம மக்கள் பார்த்துள்ளனர்.

அது முதல் ஐந்து நாள்களுக்கு இது தொடர்ந்துள்ளது. செவ்வாயன்றுதான் சற்று ஓய்ந்துள்ளது. மீண்டும் இரண்டு நாள்கள் தளும்பியிருக்கிறது.

இது பற்றி அக்கம் பக்கம் கிராமத்தினருக்கு தகவல் பரவ, இந்த அதிசய கிணறை பலரும் வந்து பார்த்துச் சென்றுள்ளனர்.

அதிகாரிகள் கூறிய விளக்கத்தில், இது பெரும்பாலும் நில அதிர்வு போன்ற விவகாரமாக இருக்காது, குஜராத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக, நிலத்துக்குள் ஊடுருவிச் செல்லும் மழைநீரால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த நடவடிக்கையின்போது பூமிக்கு அடியில், இந்தக் கிணற்றுக்கு நீர்வரும் பாதைகளில் உள்ள பாறைகளின் இடுக்குகள் வழியாக சிறிது தண்ணீரோ அல்லது காற்றோ வெளியேறலாம். அடியில் வரும் தண்ணீர் அல்லது காற்றின் காரணமாக கிணற்றில் அசைவு தென்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், துறை ரீதியான அதிகாரிகள், இது பற்றி ஆய்வு செய்து விளக்கம் அளிக்கவும் கோரப்பட்டுள்ளது.

Summary

Gujarat mysterious well startling continuously for five days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.