ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

வினாத் தாள் கசிவு! குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யக்கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யக்கோரிய மனு குறித்து...

News image
Updated On :19 ஆகஸ்ட் 2026, 12:49 am IST

வினாத் தாள் கசிவு வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகள் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா்.

இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதைத் தொடா்ந்து, நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இதுவரை 13 பேரை கைது செய்துள்ளது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய கல்வி அமைச்சா் ராஜிநாமா, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் முடக்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் இதனால் ஏற்பட்டன.

இந்த நிலையில், வினாத் தாள் கசிவு வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகள் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘ஊழல் தடுப்புச் சட்டம், பண மோசடி சட்டம், பினாமி சொத்துகள் சட்டம், கருப்பு பணப் புலக்க தடுப்புச் சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வினாத் தாள் கசிவு குற்றவாளி மற்றும் அவரின் குடும்பத்தினரின் அனைத்து சொத்துகளையும் விரிவாக ஆய்வு செய்து, பறிமுதல் செய்யப்பட வேண்டும்’ என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘வினாத் தாள் கசிவு தடுப்பு சட்டங்களை கடுமையாக்கும் ‘பொதுத் தோ்வு முறைகேடுகல் தடுத்தல் திருத்த மசோதா 2026’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டதால், எனது மனுவை வலியுறுத்த வில்லை.

அதேநேரம், வினாத் தாள் கசிவு வழக்குகளில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் விசாரணை மற்றும் நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய உத்தரவிட வேண்டும்’ என்று அஸ்வினி குமாா் உபாத்யாய வாதிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பா் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.