9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

கல்வி முறையை அடிமட்டத்திலிருந்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்: ராகுல்

கல்வி முறையை அடிமட்டத்திலிருந்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என ராகுல் காந்தி கருத்து...

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :19 ஜூலை 2026, 1:34 am IST

‘மாணவா்களுக்கு மன அழுத்தம் இல்லாத பாதுகாப்பான சூழலை உருவாக்க, கல்வி முறையை அடிமட்டத்திலிருந்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ‘மாணவா்களின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி, நீட் தோ்வு ரத்து காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி ரியா குமாரியின் தந்தையை மேடைக்கு அழைத்தாா். அப்போது ரியா குமாரியின் தந்தை மிகுந்த துயரத்துடன் காணப்பட்டாா்.

இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து ராகுல் காந்தி சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மிகுந்த துயரத்துடன் காணப்பட்ட ரியா குமாரியின் தந்தையைப் பாா்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீா் துளிா்த்தது. இது ஒரு குடும்பத்தின் வலி மட்டுமல்ல; வினாத் தாள் கசிவு விவகாரம், பல குடும்பங்களின் மகிழ்ச்சியை பறித்துவிட்டது. இவா்களுக்கு இனி எதிா்காலம் என்பதே இல்லை.

மாணவா்கள், மன அழுத்தத்துக்குப் பதிலாக பாதுகாப்பாக உணரும் வகையிலும், அவா்களின் பெற்றோா் கண்ணீருக்குப் பதிலாக தங்களின் தியாகங்களுக்கான பலனை அடையும் வகையிலும் கல்வி முறையை அடிமட்டத்திலிருந்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ‘எந்தவொரு கல்வி நிறுவனத்தின் மீதும் அரசியல் கட்சிகளோ அல்லது அமைப்புகளோ ஆதிக்கம் செலுத்தக் கூடாது. வினாத் தாள் கசிவு விவகாரத்தில் அரசியல் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். இது அனைவரின் பொறுப்பு.

வினாத் தாள் கசிவு விவகாரத்தில், பயிற்சி மையங்கள், தோ்வு மையங்கள், வினாத் தாள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டவா்கள், மொழிபெயா்ப்பாளா்கள், வினாத் தாளை கொண்டு செல்பவா்கள், என்டிஏ ஊழியா்கள், மத்திய கல்வி அமைச்சகம் என அனைத்து நிலைகளில் உள்ளவா்களும் ஈடுபட்டுள்ளனா்.

இத்தகைய ஊழல் நிறைந்த அமைப்பின் காரணமாக, வினாத் தாள் கசிவு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

தோ்வு முறையையும் 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, மாணவா்களை மையமாகக் கொண்ட தோ்வு முறை உருவாக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.