புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

யுஜிசி நெட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரிய மனு தள்ளுபடி!

2026 ஜூனில் நடைபெற்ற நெட் தேர்வை மீண்டும் முழுவதுமாக நடத்தக் கோரிய மனு தில்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி...

The answer key for the UGC-NET exam will be released this week!

யுஜிசி - கோப்புப் படம்

Published On :

2026 ஜூனில் நடைபெற்ற நெட் தேர்வை மீண்டும் முழுவதுமாக நடத்தக் கோரிய மனு தில்லி உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஆக. 19) தள்ளுபடி செய்யப்பட்டது.

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு தகுதி பெறுவதற்கும், அங்கு முனைவர் பட்டங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் மற்றும் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய தேர்வு முகமை சார்பில் ‘நெட்’ தேர்வு நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் இந்தத் தேர்வானது ஆண்டுக்கு இரண்டு முறை பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல் தேர்வு ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் 30 வரை ஆறு நாள்கள் நடத்தப்பட்டது. மேலும், ஜூலை 6 ஆம் தேதி மறுதேர்வும் நடைபெற்று முடிந்தது.

87 பாடங்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் தற்காலிக விடைக்குறிப்புகள் 84 பாடங்களுக்கு மட்டுமே வெளியாகின. ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு பிழைகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில் அவற்றுக்கான விடைக்குறிப்புகள் வெளியாகவில்லை.

இதனைத் தொடர்ந்து, ஆங்கிலம் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான மறுதேர்வு வரும் செப்டம்பர் 9 ஆம் தேதியும், சமூகவியல் பாடத்துக்கான தேர்வு வரும் செப்டம்பர் 10 ஆம் தேதியும் நடைபெறும் என என்டிஏ அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சமூகவியல் தேர்வெழுதிய தேர்வர் ஒருவர், வினாத்தாள் கசிவுகளைக் குறிப்பிட்டு, யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை மீதமுள்ள 84 பாடங்களுக்கும் வெளியிடக்கூடாது என்றும் இந்த நெட் தேர்வானது மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்றும் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஜம்சீத் சிங் மத்திய அரசு சார்பாக வாதாடிய சொலிசிட்டர் ஜெனரலின் கருத்துகளைக் கேட்டறிந்தார். பின்னர், அந்தத் தேர்வரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Summary

A petition seeking a complete re-conduct of the NET examination held in June 2026 was dismissed by the Delhi High Court on Wednesday (August 19).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.