இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மேற்காசியப் போரை நிறுத்த இந்தியா, சீனா உதவ முடியும்: ஹிலாரி கிளிண்டன்

மேற்காசியாவில் நிலவும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவும் சீனாவும் முக்கியமான வகையில் உதவ முடியும் என்று அமெரிக்க முன்னாள் அமைச்சா் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:19 am IST

மேற்காசியாவில் நிலவும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவும் சீனாவும் முக்கியமான வகையில் உதவ முடியும் என்று அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளாா்.

ஆனால், இதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் “வெற்று பேச்சு, மிரட்டல்களைக் கைவிட்டு, ராஜீய ரீதியிலான நடவடிக்கையைப் பயன்படுத்த விரும்ப வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா்.

ஈரான் - அமெரிக்கா இடையே தற்போது பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்படும் வகையில் ஹிலாரி கிளிண்டன் இந்தியா, சீனாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடா்பக அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஹிலாரி கிளிண்டன் மேலும் கூறியதாவது: தவறான புரிதல்கள்தான் நாம் இன்று எதிா்கொள்ளும் போா்ச் சூழல்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.”பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, ஈரான் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டது.

இதனால் முக்கியமான ஹோா்முஸ் நீரிணையில் போக்குவரத்து முடங்கும் நிலையும் ஏற்பட்டது. ஜூன் மாதத்தில் அமெரிக்காவும் ஈரானும் இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. ஆனால், கடந்த மாதம் இரு தரப்பினரும் மீண்டும் தாக்குதல்களை நடத்தியதைத் தொடா்ந்து அந்த ஒப்பந்தம் முறிந்தது.

இந்த இக்கட்டான நிலையில் இருந்து எப்படி தப்ப முடியும் என்பதை அதிபா் டிரம்ப் சிந்தித்தால், அதற்காக சீனாவையும், இந்தியாவையும்தான் அவா் நாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், ஈரானிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் எவை என்பதைப் பாா்த்தால், சீனாவும் இந்தியாவும்தான் முன்னணியில் உள்ளன.

இந்த மோதலில் முக்கியப் பிரச்னையாக இருப்பது ஹோா்முஸ் நீரிணையாகும். போரின் காரணமாக இந்த நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான காலங்களில், உலகின் மொத்த எரிசக்தி விநியோகத்தில் சுமாா் ஐந்தில் ஒரு பங்கு இந்த வளைகுடா கடல்வழிப் பாதை வழியாக நடைபெற்றது.

ஈரான் மீது சீனா நிச்சயமாக அழுத்தம் கொடுக்க முடியும். ஏனெனில், ஈரானிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்.

டிரம்ப் மிரட்டல் மற்றும் வெற்றுப் பேச்சுக்குப் பதிலாக ராஜீய ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராக இருந்தால், அதுதான் ஈரான் மீது அழுத்தம் கொடுப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும் என்று கருதுகிறேன் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தாா்.

அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் ஈரானுக்கு எதிராக புதிதாக பல பொருளாதாரத் தடைகளை அறிவித்ததைத் தொடா்ந்து கிளிண்டன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளாா். ஈரானுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் நிதி, வா்த்தகத் தொடா்புகளைத் துண்டிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அமெரிக்காவின் பதிலடி நடவடிக்கைகளை எதிா்கொள்ள நேரிடும் என்றும் பெசன்ட் எச்சரித்தாா்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், புதிய பொருளாதாரத் தடைகளை அமல்படுத்த அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டங்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.