

தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சிகிச்சை முடிந்து இன்று (ஜன. 11) வீடு திரும்பினார்.
மார்பக தொற்று மற்றும் மூச்சுக்குழாய் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு சிகிசைக்காக கடந்த 5 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு வாரம் கழித்து வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக மருத்துவமனையின் மூத்த அதிகாரி தெரிவித்ததாவது:
மூத்த காங்கிரஸ் தலைவர் இன்று மாலை 5 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், மேலும் அவரது இல்லத்தில் சிகிச்சையைத் தொடர ஆலோசனை வழங்கப்பட்டது எனக் குறிப்பிட்டார்.
தற்போது 79 வயதாகும் சோனியா காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவராக உள்ளார். மாநிலங்களவை எம்.பி.யாகவும் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.