இந்தியாவின் 50% தொழிலதிபர்கள் குஜராத்தியர்களாக இருப்பது எப்படி?
புதிய தொழில்களைத் தொடங்குவது, சொத்துகளைக் குவிப்பது என்பது போன்றவற்றில், ஒட்டுமொத்த நாட்டுக்கும் வழிகாட்டியாக இருப்பதே ஒரு சமூகத்தினர். அது குஜராத்தியர்கள்.
நாட்டின் 191 கோடீஸ்வரர்களில் 108 பேர் குஜராத்தியர்கள் என்கிறது கடந்த ஆண்டைய தரவுகள். அதாவது பாதிக்கும் மேற்பட்டவர்கள். ஆனால், இது எதேச்சையாக அல்லது தன்னிச்சையாக நடந்தது அல்ல.
ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் வெறும் 5 சதவிகிதம்தான் குஜராத்திய மக்கள். ஆனால், அவர்களது ஜிடிபி 8 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. அது மட்டுமல்ல, ஒரு சராசரி அமெரிக்கரை விடவும் மூன்று மடங்கு அதிகம் குஜராத்தியர்கள் ஈட்டுகிறார்கள.
திருபாய் அம்பானி முதல் கௌதம் அதானி வரை இந்தியாவின் பெரும்பாதி பணக்காரர்கள் குஜராத்தியர்களாகவே இருக்கிறார்கள்.
இதற்குக் காரணம், குஜராத்தியர்களின் மனநிலை, கலாசாரம், நிதிநிலை பழக்கம் போன்றவைதான். குஜராத்தியர்களின் குடும்பங்களில், குழந்தைகள் முதலே வியாபார நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. வணிகம் தொடங்கி சவாலை ஏற்காவிட்டால் வளர்ச்சி இருக்காது என்று கற்பிக்கப்படுகிறது.
முதலில் தொழிற்சாலை அமைப்பது என்பதைத்தான் இலக்காக வைக்கிறார்கள். நம் ஊர் இளைஞர்கள் போல விலை உயர்ந்த பைக் அல்லது கார் வாங்க வேண்டும் என்பது அல்ல. சொகுசு வாழ்க்கையை நோக்கி அவர்கள் ஓடுவதில்லை. வாழ்வை சொகுசாக மாற்றுவதை நோக்கி ஓடுகிறார்கள்.
இவர்களது இரண்டாம் தாய்மொழியாக வணிகம் அமைந்துவிடுகிறது, வீடுகளில் புத்தாக்கம், நிகர லாபம், முதலீடு போன்றவை பேசப்படும். நம்மைப்போல கல்லூரிகளில் அறிந்து கொள்வது அல்ல.
எந்த நிதி நெருக்கடியையும் சமாளிக்கும் திறன், நிதி ஒழுங்கு ஆகியவை இளைஞர்களுக்கு போதிக்கப்படுகிறது. நம்மூர் இளைஞர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பான வேலை என்பதை மூளையின் திணிக்கிறார்களோ அது போல, குஜராத்திய இளைஞர்களுக்கு உரிமையாளராகுதல், லாபம் ஈட்டுதல், நிலைத் தன்மையை கொண்டு வருதல் போன்றவை திணிக்கப்படுகிறது.
குஜராத்திய சமூக மக்கள் அதிக நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். சூரத் டைமண்ட் சந்தையாக இருந்தாலும், ராஜ்கோட் தொழில்துறையாக இருந்தாலும் இவர்களுக்குள் ஒரு மிகப்பெரிய ஒருங்கிணைப்பு இருக்கும்.
நம்முடைய மக்கள், நம்முடைய தொழில் என்ற ஒற்றை வாசகத்தின் பின்னால்தான் அனைவரும் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதுபோல, குஜராத்திய தொழிலதிபர்கள் ஒரு விஷயத்தை விட்டுக் கொடுப்பதில்லை, பல கோடிக்கு சொந்தக்காரர்கள் ஆனாலும் குடும்பம்தான் முதலில் என்பதைத்தான்.
எனவே, ஒரு சமூகமே தொழிலை முன்னெடுத்துச் செல்கிறது. சிலர் தோற்கவும் செய்கிறார்கள். ஆனால் பலர் வெற்றி பெறுகிறார்கள். இதுவே குஜராத்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தொழிலதிபர்களாக இருக்கக் காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
About the fact that more than 50 percent of India's businessmen are Gujaratis
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

