

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நேற்று(ஜன. 26) கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
’அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என குறிப்பிடப்படும் இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
“நேற்று(ஜன. 26) ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை மக்கள் ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று அழைக்கிறார்கள்.
இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள மக்களுக்கு பெரும் வாய்ப்புகளை கொண்டு வரும். இது உலகின் இரண்டு முக்கிய பொருளாதாரங்களுக்கிடையேயான கூட்டாண்மையின் சிறந்த உதாரணம்,” என்று வர்த்தகம் ஒப்பந்தம் குறித்து உரையாற்றியபோது மோடி தெரிவித்தார்.
மேலும், இந்த ஒப்பந்தம் இந்திய உற்பத்தித் துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கும் என்றும் பிரதமர் கூறினார்.
குடியரசு நாள் விழாவை ஒட்டி சிறப்பு விருந்தினர்களாக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான்டா் லெயன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
சட்டப்பூர்வ ஆய்வுகளை முடித்த பின், இந்த ஒப்பந்தத்தின் முறையான கையெழுத்து நிகழ்வு இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே நீண்ட காலமாக நடைபெற்றுவரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சின் அம்சங்கள், இருதரப்புக்கும் இடையே உத்திசார்ந்த பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்தான நிலையில், அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவுளி, காலணி உள்பட சுமார் 90 சதவீத பொருள்களுக்கு வரி விலக்கு அல்லது வரி குறைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.