

அமெரிக்காவில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் பிரதமர் மோடியின் இடம்பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம், "எப்ஸ்டீன் கோப்புகளிலிருந்து ஒரு மின்னஞ்சல் செய்தி பற்றிய அறிக்கைகளை நாங்கள் கண்டோம். அதில் பிரதமர் மோடி மற்றும் அவரது இஸ்ரேல் வருகை பற்றிய குறிப்பு உள்ளது.
2017 ஜூலையில் பிரதமர் மோடியின் இஸ்ரேல் வருகையைத் தவிர, மின்னஞ்சலில் உள்ள மற்ற குறிப்புகள் அனைத்தும் குப்பையைப் போன்ற வதந்திகளைவிட சற்று அதிகமே. இது மிகவும் அவமதிப்புடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளியும்கூட. இவரின் குற்றச் செயல்கள் அடங்கிய சுமார் 30 லட்ச பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், புகைப்படங்கள், விடியோக்கள் அடங்கிய தொகுப்புதான் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்.
அமெரிக்காவில் பெரும் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கும் எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் பல்வேறு அரசியல் மற்றும் முக்கிய பிரமுகர்களும் சிக்கியிருப்பதாக அவ்வப்போது அந்நாட்டு நீதித் துறை கூறி வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, காங்கிரஸும் கேள்வி எழுப்பியுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளைக் குறிப்பிட்டுப் பேசிய காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, "இது தேசத்துக்கே அவமானகரமான ஒன்று. அமெரிக்க அதிபருக்காக இஸ்ரேலில் பிரதமர் மோடி ஆடிப் பாடியதாக எப்ஸ்டீன் கோப்புகளில் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மூலம் அவருடன் (எப்ஸ்டீன்) பிரதமருக்கு நெருக்கம் இருக்கக் கூடும் என்று தெரிகிறது.
எப்ஸ்டீனுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான இந்த மன்னிக்க முடியாத தொடர்பு, நாட்டின் கண்ணியம் மற்றும் சர்வதேச நற்பெயரைக் கெடுப்பதாய் இருக்கும். இதுகுறித்து பிரதமர் மோடியிடமிருந்து உடனடியான பொறுப்புக் கூறலும் விளக்கமும் அளிக்கப்பட வேண்டும்" என்று பிரதமர் மோடி மீது கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.