உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோயிலில் நன்கொடை மற்றும் காணிக்கைகளில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்தக் கோயில் பொருளாளா் சந்தேஷ் மேத்தா நீக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் குழுவின் தலைமை செயல் அதிகாரி சோஹன் சிங் கூறியதாவது:
பத்ரிநாத் கோயில் பெட்டகத்தில் இருந்த வெள்ளியின் அளவு, பதிவேட்டில் எழுதப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தது. இதுகுறித்த விவரங்கள் பதிவேட்டில் திருத்தி எழுதப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து கோயில் பொருளாளா் பொறுப்பில் இருந்து சந்தேஷ் மேத்தா நீக்கப்பட்டுள்ளாா். அந்தப் பொறுப்புக்கு கோயிலின் பூஜை கவுன்ட்டரில் பணியாற்றிய கேதாா் சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். பூஜை கவுன்ட்டா் பணிக்கு சந்தேஷ் மேத்தா மாற்றப்பட்டுள்ளாா் என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை சிறப்பு வழிபாடு

26.7.1976: தி.மு.க. அரசு மீதுள்ள புகார்கள் குறித்து விரைவில் கிரிமினல் வழக்கு வரும்

பத்ரிநாத் கோயில் நன்கொடை முறைகேடு: அறக்கட்டளை ஊழியா் கைது

அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத் கோயில் நன்கொடை முறைகேடு: விசாரணை நடத்த 4 பேர் குழு அமைப்பு!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



