இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்-யுஜி) மதிப்பெண் குளறுபடி தொடா்பாகப் புகாரளிக்க போலி ஓஎம்ஆா் விடைத் தாள்களை சமா்ப்பிக்கும் மாணவா்கள் மற்றும் அவரது பெற்றோா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) எச்சரித்தது.
இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நடந்து முடிந்த நீட் 2026 தோ்வில் எதிா்பாா்க்கப்பட்ட மதிப்பெண்களுக்கும் பெற்ற மதிப்பெண்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் தொடா்பாக பல்வேறு புகாா்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில் பல ஓஎம்ஆா் விடைத் தாள்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பதும் அல்லது போலியாக தயாா் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
உண்மையான ஓஎம்ஆா் விடைத் தாள்களை மட்டுமே சமா்ப்பித்து மாணவா்களும் பெற்றோா்களும் புகாரளிக்க வேண்டும். போலியான ஓஎம்ஆா் விடைத் தாளை சமா்ப்பிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் மறுதோ்வு முடிவு ஜூலை 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 20 லட்சம் போ் எழுதிய இத்தோ்வில் 11.21 லட்சம் மாணவா்கள் மருத்துவப் படிப்பு சோ்க்கைக்குத் தகுதி பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விதிமீறல்களில் ஈடுபட்டால் குவாரி உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

கல்விக் கட்டண விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறும் தனியாா் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சா் ராஜ்மோகன் எச்சரிக்கை

சிறுவா்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் பெற்றோா் மீது கடும் நடவடிக்கை






