நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜூலை 20) தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது.
அண்மையில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள் உள்பட 8 மசோதாக்கள் இந்தக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவுள்ளன.
முக்கியமாக, வருமான வரி சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. ரூபாயின் மீதான அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் நோக்கில், அரசுப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயங்கள் மீதான வருமான வரியிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38-ஆக உயா்த்தி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதா, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்த மசோதா, பிறப்பு - இறப்பு பதிவுச் சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவையும் தாக்கலாக உள்ளன.
தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கத்துக்கான அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா பட்டியலிடப்படவில்லை. எனினும், கூடுதல் மசோதாவாக அதை கொண்டுவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை.
இந்தச் சூழலில், மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்தும் எதிர்க்கட்சிகளின் அமளியை சமாளிப்பது குறித்தும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Summary
A meeting of National Democratic Alliance (NDA) MPs, led by Prime Minister Narendra Modi, is currently underway at the Parliament complex.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










