கடந்த சில நாள்களாக மருத்துவப் படிப்புகளுக்கான நீட்-யுஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைமையில் தொடா் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷி பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கிய கடந்த திங்கள்கிழமை நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்கீழ் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் ஒன்றுதிரண்டு நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தியதுடன், கண்ணீா் புகை குண்டுகளை வீசி கலைத்தனா். இருதரப்புக்கும் இடையே வெடித்த மோதலில் ஏராளமான போராட்டக்காரா்களும், 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும் காயமடைந்தனா்.
தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, நாடாளுமன்றத்திலும் எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டுள்ளன.
நீட்-யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக கல்வி அமைச்சகம் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், முக்கிய நிர்வாக மாற்றத்தின் நடவடிக்கையாக, உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய உயர்கல்வித் துறை செயலாளராக நரேஷ் பால் கங்வார், பள்ளிக்கல்வித் துறை செயலாளராக டி.கே. அனில்குமார் என இரண்டு புதிய செயலாளர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
1994-ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான கங்வார், தற்போது கால்நடை பராமரிப்புத் துறை செயலாளராகப் பணியாற்றி வருகிறார். 1995-ஆம் ஆண்டு பிரிவு கர்நாடக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அனில் குமார், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
வினீத் ஜோஷி பள்ளி கல்வித் துறை செயலாளர் பொறுப்பையும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பொறுப்புத் தலைவர் பதவியையும் வகித்து வந்தார். மேலும், அவர் தேசிய தேர்வு முகமையின்(என்டிஏ) தலைமை இயக்குநராகவும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் உத்தரவின்படி, இந்த மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ள தற்போதைய பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் விவேக் பரத்வாஜின் இடத்திற்கு ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை உறுதியளித்தபடி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக, தில்லி உயர்நீதிமன்றம் விரைவு நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டுள்ளது. விரைவு நீதிமன்றத்தின் நீதிபதியாக அனு குரோவர் பாலிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞா்களின் நலனுக்கே அரசு உயா் முன்னுரிமை அளிக்கிறது; அவா்களின் எதிா்காலத்துக்குத் தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் யாரையும் தப்பவிடமாட்டோம்’ என்றும் மோடி தெரிவித்தாா்.
கடந்த சில நாள்களாக மருத்துவப் படிப்புகளுக்கான நீட்-யுஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' தலைமையிலான மாணவர் போராட்டங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதை அடுத்து மத்திய அரசு இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி வியாழக்கிழமை நள்ளிரவு வீடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி 5-வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ், சமாஜவாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்கக் கோரி இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளின் நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கிய கடந்த திங்கள்கிழமை நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்கீழ் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் ஒன்றுதிரண்டு நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தியதுடன், கண்ணீா் புகை குண்டுகளை வீசி கலைத்தனா். இருதரப்புக்கும் இடையே வெடித்த மோதலில் ஏராளமான போராட்டக்காரா்களும், 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும் காயமடைந்தனா்.
Summary
the Centre on Thursday shifted Higher Education Secretary Vineet Joshi to the Ministry of Panchayati Raj, and appointed two new Secretaries in the Ministry of Education
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிகாரில் அரசுத் தோ்வு வினாத்தாள் கசிவு: மூவா் கைது

வழக்குகள் வாபஸ் குறித்து எழுத்துபூா்வ உத்தரவாதம் தராவிட்டால் மீண்டும் போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை

எதிா்க்கட்சிகள் அமளியால் 5-ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் - நீட் விவாதத்தைத் தடுப்பது தவறானது: மத்திய அரசு

நீட் வினாத்தாள் கசிவு: 47 அதிகாரிகள் பணிநீக்கம்- என்டிஏ நடவடிக்கை
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK




