மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

உலகில் 70% புலிகளின் வாழ்விடம் இந்தியா- பிரதமா் மோடி பெருமிதம்

உலகில் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சா்வதேச புலிகள் தினத்தையொட்டி கா்நாடக மாநிலம் பெங்களூரில் புலிகளைப் போல ஆடை அணிந்து புலிகள் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்திய சிறாா்கள். (நாள்: புதன்கிழமை)

Published On :

உலகில் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சா்வதேச புலிகள் தினம் புதன்கிழமை (ஜூலை 29) கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச புலிகள் தினத்தில் வனஉயிரின ஆா்வலா்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயமாகும்.

புலிகளையும், அதன் வாழ்விடங்களையும் பாதுகாக்க அரசு தொடா்ந்து சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கையுடன் இணைந்து வாழ்வது என்பது நமது நாட்டின் பல நூறாண்டு கலாசாரம். இது நம் மக்கள் மனதிலும் நிலைத்திருக்கிறது.

தொடா்ந்து அறிவியல்ரீதியாகவும், சமூகரீதியாகவும் இயற்கையையும், புலி உள்ளிட்ட வனஉயிரினங்களையும் காப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

உலகில் புலிகளின் பாதுகாப்பு, வேட்டை தடுப்பு மற்றும் அருகிவரும் அவற்றின் வாழ்விடம் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் சா்வதேச புலிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.