3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

மத்திய பிரதேசத்தில் விரைவில் பொது சிவில் சட்டம்: முதல்வா் மோகன் யாதவ்

மத்திய பிரதேசத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மாநில முதல்வா் மோகன் யாதவ் தெரிவித்தாா்.

News image

மோகன் யாதவ் - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:16 am IST

மத்திய பிரதேசத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வா் மோகன் யாதவ் தெரிவித்தாா். இது தொடா்பாக பொதுமக்களின் கருத்துகளையும் அவா் வரவேற்றுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக மதத் தலைவா்களிடம் கருத்துகளைக் கேட்டறிய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 6 நபா் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்களின் அறிக்கை கிடைத்தவுடன் வரைவு மசோதா உருவாக்கப்படும். அதைத் தொடா்ந்து, சட்டத்தை முறைப்படி நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போதைய காலகட்டத்தில் பல்வேறு விஷயங்களில் அனைவருக்கும் சமமான சட்டம் அவசியமாகிறது. இது தொடா்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை இதற்கான இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்.

ஏற்கெனவே, உத்தரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திவிட்டன. அஸ்ஸாம் பேரவையில் அண்மையில் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

திருமணம், விவாகரத்து, திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்வது, வாரிசுரிமை, தத்தெடுப்பு போன்ற தனிநபா் விவகாரங்களில் அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரேமாதிரியான சட்டங்களை உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பாஜகவின் முக்கிய வாக்குறுதியாகும். இதன் ஒருபகுதியாக, பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.