/

நாங்கள் ஏன் பிரிந்தோம்? சுஷ்மிதா சென் உடனான பிரிவு குறித்து மனம் திறந்த லலித் மோடி!

நாங்கள் ஏன் பிரிந்தோம் என்று சுஷ்மிதா சென் உடனான பிரிவு குறித்து மனம் திறந்தார் லலித் மோடி

News image

'என்னில் பாதி' சுஷ்மிதா சென்னுடன் புகைப்படத்தை பகிர்ந்து டிவிட்டரை சூடாக்கியிருந்த லலித் மோடி. - X page

Updated On :3 ஜூன் 2026, 1:24 pm IST

சுஷ்மிதா சென் உடனான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியிருந்த தொழிலதிபர் லலித் மோடி, நாங்கள் ஏன் பிரிந்தோம் என்பது குறித்து தற்போது மனம் திறந்து பேசியிருக்கிறார்.

தங்களுக்குள் பெரிய கருத்துவேறுபாடுகள் இல்லை என்றும், என்னுடைய தொழில் முழுக்க லண்டனில், அவரோ இந்தியாவில் வாழ்ந்து வந்தார். எங்களுக்கு இடையேயான தொலைதூரமே நாங்கள் பிரிவதற்கு வழிவகுத்துவிட்டதாக லலித் மோடி கூறியிருக்கிறார்.

ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், லலித் மோடி தன்னுடைய வாழ்வில், மிக முக்கியமானவர்களில் சுஷ்மிதா சென்னும் ஒருவர். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடோ மனக்கசப்போ ஏற்படவில்லை. நாங்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்ததால், எங்களது உறவைத் தொடர முடியவில்லை, அதுவே மெல்ல எங்களுக்குள் விரிசலை ஏற்படுத்திவிட்டது என்கிறார்.

ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், லலித் மோடி தன்னுடைய வாழ்வில், மிக முக்கியமானவர்களில் சுஷ்மிதா சென்னும் ஒருவர். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடோ மனக்கசப்போ ஏற்படவில்லை. நாங்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்ததால், எங்களது உறவைத் தொடர முடியவில்லை, அதுவே மெல்ல எங்களுக்குள் விரிசலை ஏற்படுத்திவிட்டது என்கிறார்.

அவர் தற்போதும் என்னுடைய நெருங்கிய நண்பர்தான், அவருக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க நான் எப்போதும் வாழ்த்துவேன், அவர் மிகச் சிறந்த பெண்மணி. நான் அவர் எப்படி வளர்ந்துகொண்டே இருக்கிறார் என்பதை பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுஷ்மிதா சென்னுடன், விடுமுறை நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கடந்த 2022ஆம் ஆண்டு லலித் மோடி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தபோது, அது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் நான் ஏன் பகிர்ந்தே என்பது குறித்து சுஷ்மிதாவுக்கு நன்கு தெரியும். அதற்கு அவர் ஒருபோதும் மறுக்கவில்லை. அந்தநேரத்தில், நாங்கள் விமானத்தில் இருந்தோம். அவர் முன்னிலையில்தான், நான் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினேன். ஆனால் அதை வெளியிடுவேன் என்று அவர் நினைக்கவில்லை. நாங்கள் வேறு ஒரு விவகாரம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். இப்போது புகைப்படங்களை வெளியிடப்போகிறேன் என்று சொன்னேன். அவர் அதைப் பார்த்து சிரித்தார். ஆனால், நான் அந்தப் புகைப்படங்களை சப்மிட் கொடுத்துவிட்டேன். அதன்பிறகு, அவர் தாயைப் பார்க்க லண்டன் சென்றுவிட்டார். அது பற்றி சுஷ்மிதா எதுவும் சொல்லவில்லை. புகைப்படங்களை அகற்றுமாறு கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பிறகு, ஏன் பிரிந்தீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, எங்களுக்குள் அதிக தொலைவு இருந்தது, அவரது வேலை இந்தியாவில், நான் லண்டனில் வாழ்ந்துவந்தேன் என்றார்.

Summary

Lalit Modi opens up about his breakup with Sushmita Sen, saying why we broke up

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.