உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது பற்றி...

PM Modi

பிரதமா் மோடி - கோப்புப் படம்

Published On :

அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு அளிப்பதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

மூலதன ஆதாய வரி 12.5 சதவிகிதத்தையும், வட்டி வருமானத்தின் மீதான பிடித்த வரி 20 சதவிகிதத்தையும் முற்றிலும் நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

”அரசுப் பத்திரச் சந்தையை ஆழப்படுத்தவும், பங்குப் பிரிவில் அதிக வெளிநாட்டு நிறுவன முதலீட்டை ஈர்க்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்நிய செலாவணி மேலாண்மை (கடன் அல்லாத பத்திரங்கள்) மூன்றாவது திருத்த விதிகள், 2026-ஐ பொருளாதார விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது.

அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (எஃப்பிஐ) செய்யும் முதலீடுகளுக்குப் பொருந்தக்கூடிய வரி விதிப்பு முறையை முறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, அத்தகைய முதலீடுகளுக்கு வட்டி மற்றும் மூலதன ஆதாயத்தின் மீதான வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த வரி விலக்கானது, 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றது. அதாவது, அரசுப் பத்திரங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு செய்யப்பட்ட முதலீடுகளுக்கும் இந்த வரி விலக்கு பொருந்தும்.

மேலும், இந்தியப் பங்குச் சந்தைகளில் அதிக மற்றும் நிலையான வெளிநாட்டு முதலீட்டு வரவுகளுக்கு இது ஆதரவளிக்கும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Full tax exemption for foreign investors in government bonds - Central Government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.