தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!

பினராயி விஜயனின் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது பற்றி..

News image

பினராயி விஜயனின் மகள் டி. வீணா - TNIE

Updated On :9 ஜூன் 2026, 11:52 am IST

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி. வீணா விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் என்ற மணல் அகழ்வு நிறுவனம் மற்றும் வீணாவின் (தற்போது செயல்பாட்டில் இல்லாத) நிறுவனமான 'எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' ஆகியவற்றுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாக இந்த விசாரணை நடைபெறுகிறது.

பண மோசடி வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 29-ம் தேதி திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் உள்ளிட்டோர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் என்ற பெயரில் சிஎம்ஆர்எல் நிறுவனம் 'எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்திற்கு ரூ. 2.78 கோடி மதிப்பிலான மோசடியான தொகையை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இந்த விசாரணை நடைபெறுகிறது.

மேலும், சிஎம்ஆர்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சசிதரன் கார்த்தா நிர்வகிக்கும் 'எம்பவர் இந்தியா கேப்பிடல் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற மற்றொரு நிறுவனமும், 'எக்ஸாலஜிக்' நிறுவனம் உரிய நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய நிலையிலும், அதற்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான கடனை வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து, பினராயி விஜயனின் மகள் வீணா, அமலாக்கத் துறை முன்பு ஜூன் 12 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை முன்பு அவர் ஆஜரானதும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் உள்ளிட்ட 9 பேருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

The Enforcement Directorate has summoned Veena T, daughter of ex-Kerala chief minister Pinarayi Vijayan, for questioning in a money laundering case here this week, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.