முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவை அவமதித்ததாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் மீது காங்கிரஸார் புகார் அளித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் விநாயக் தாமோதர் சாவர்க்கர் கௌரவிக்கப்படுவதை நேரு தடுத்ததாக பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரான பி.எல். சந்தோஷ் விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து, பி.எல். சந்தோஷின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸார் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், சமூக ஊடகங்கள் வாயிலாக முன்னாள் பிரதமர் நேரு மீது அவதூறு பரப்பியதாக பி.எல். சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெங்களூரு ஹை கிரவுன்ட்ஸ் காவல் நிலையத்தில் காங்கிரஸார் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிக்கும் சமூக ஊடகப் பதிவுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கர்நாடக துணை முதல்வர் ஜி. பரமேஸ்வராவை கர்நாடக காங்கிரஸின் பொதுச் செயலாளர் எஸ். மனோகர் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Congress files complaint against BJP's BL Santosh over alleged derogatory remarks against Jawaharlal Nehru
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரபரப்பில் நாடாளுமன்றம்: என்ன செய்யப் போகிறது திமுக? | Congress | BJP

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மூச்சுவிடவும் டோக்கன் வாங்க வேண்டுமா? பாஜக அரசுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி

தவெகவில் இணைகிறாரா சி. விஜயபாஸ்கர்? இபிஎஸ்ஸுக்கு எதிராக தொடர் பதிவு!







