முகப்பு
தற்போதைய செய்திகள்

நேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்

ஜனநாயகத்தைப் பாலூட்டி வளர்த்த பெருமை ஜவாஹர்லால் நேருவையே சேரும் என்றும், நேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம் என சிதம்பரம் கூறியிருப்பது குறித்து...

Updated On : 11 ஜூன் 2026, 10:50 am IST
ப. சிதம்பரம் - கோப்புப்படம்.
பகிர்:

ஜனநாயகத்தைப் பாலூட்டி வளர்த்த பெருமை ஜவாஹர்லால் நேருவையே சேரும் என்றும், நேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றதையடுத்து, அதே ஆண்டு மே 26-ஆம் தேதி முதல்முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றாா். இதையடுத்து நடைபெற்ற 2 மக்களவைத் தோ்தல்களிலும் பாஜக கூட்டணி வென்றதையடுத்து, தொடா்ந்து 3-ஆவது முறையாக அவா் பிரதமராக பதவி வகித்து வருகிறாா்.

இதற்கு முன்பு, தோ்தலில் வென்று நாட்டின் பிரதமராக தொடா்ந்து 4,398 நாள்கள் ஜவாஹா்லால் நேரு பதவி வகித்ததே சாதனையாக இருந்தது. அதை பிரதமா் மோடி விஞ்சியுள்ளாா். இதற்காக அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஜனநாயகத்தைப் பாலூட்டி வளர்த்த பெருமை ஜவாஹர்லால் நேருவையே சேரும் என்றும், நேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

4399 நாள்கள் நரேந்திர மோடி பாரதப் பிரதமராகத் தொடர்ந்து இருப்பது பாராட்ட வேண்டிய சாதனை. ஆனால் அது ஜவாஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது பிழை.

1947 முதல் 1952 வரை நேரு பிரதமராக இருந்தார் என்பதை மறக்க முடியுமா? நீக்க முடியுமா?

பாஜகவின் கணக்கு அவர்களுக்கு ஏற்பு என்பதைப் பற்றிக் கருத்துச் சொல்லவேண்டியதில்லை; ஆனால் ஊடகங்கள் பாஜகவின் கூற்றை விளக்கமில்லாமல் வெளியிடுவதுதான் வியப்பளிக்கிறது.

பிரதமர் மோடியின் 12-ஆண்டுச் சாதனையைப் பாராட்டுவோம். அதே நேரத்தில் பாரத ரத்னா நேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்

1947 முதல் 1952 வரை பிஞ்சுக் குழந்தைப் பருவத்தில் இருந்த ஜனநாயகத்தைப் பாலூட்டி வளர்த்த பெருமை ஜவாஹர்லால் நேருவையே சார்ந்தது என்பதை நினைவு கொள்வோம் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.