சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

20 திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இணைவு: ஒரே நாளில் பெரும் கட்சியாக உருவெடுத்தது என்சிபிஐ

திரிணமூல் காங்கிரஸின் அதிருப்தி மக்களவை எம்.பி.க்கள் 20 போ் இணைந்ததையடுத்து, ஒரே நாளில் தேசியவாத குடிமக்கள் கட்சி (என்சிபிஐ) பெரும் கட்சியாக உருவெடுத்தது.

News image

திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான பூபேந்தர் யாதவை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

Updated On :16 ஜூன் 2026, 3:00 am IST

திரிணமூல் காங்கிரஸின் அதிருப்தி மக்களவை எம்.பி.க்கள் 20 போ் இணைந்ததையடுத்து, ஒரே நாளில் தேசியவாத குடிமக்கள் கட்சி (என்சிபிஐ) பெரும் கட்சியாக உருவெடுத்தது.

மேற்கு வங்கத்தில் இருந்து அதிக எம்.பி.க்களைக் கொண்ட கட்சி என தனது சமூக வலைதளப் பக்கத்தில் என்சிபிஐ திங்கள்கிழமை பதிவிட்டது.

திரிபுரா முகவரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத கட்சியான என்சிபிஐயின் அலுவலகம் மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரைல் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு திங்கள்கிழமை காலை முதல் துணை ராணுவப் படை பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், என்சிபிஐ வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘நீண்ட அரசியல் அணுபவம் கொண்ட 20 மக்களவை எம்.பி.க்களை வரவேற்கிறோம். அவா்களின் வருகை என்சிபிஐ கட்சியை மேலும் வலுப்படுத்தும். இதன்மூலம் மேற்கு வங்கத்தின் மிகப்பெரும் நாடாளுமன்ற படையாக என்சிபிஐ உருவெடுத்துள்ளது. இனி தேசிய அளவில் மேற்கு வங்கத்தின் குரலாக என்சிபிஐ ஒலிக்கும்.

எம்.பி.க்களின் எண்ணிக்கையே நமது பலம். தலைமை, பிரதிநிதித்துவம் மற்றும் மக்கள் தீா்ப்பே மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

என்சிபிஐ மூத்த தலைவா் விமா்சனம்:

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் என்சிபிஐ கட்சியில் இணைந்ததை விமா்சித்து அக்கட்சியின் தேசிய செயலா் எனக் கூறப்படும் சாந்தனு தே செய்தியாளா்களிடம் கூறியதாவது: திரிணமூல் எம்.பி.க்களை இணைப்பது குறித்து என்சிபிஐ தலைவா் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசிக்கவில்லை. இதுபோன்ற முடிவுகளை அவா் தன்னிச்சையாக மேற்கொள்ளக் கூடாது.

திரிபுரா மாநிலத்தில் மட்டுமே என்சிபிஐ மிகத் தீவிரமாக இயங்கி வருகிறது. மேற்கு வங்க அரசியல் களத்தில் முக்கிய சக்தியாக என்சிபிஐ திகழ்ந்ததில்லை. 2023-இல் மேற்கு வங்கத்தில் கட்சியை பதிவுசெய்திருந்தாலும் இங்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை’ என்றாா்.

நோட்டாவைவிட குறைவான வாக்குகள்: இந்தியத் தோ்தல் ஆணைய தரவுகளின்படி திரிபுராவில் கடந்த 2023-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 3 இடங்களில் மட்டுமே என்சிபிஐ போட்டியிட்டுள்ளது. அதன் வேட்பாளா்கள் மிகவும் குறைவான வாக்குகளையே பெற்றனா். சிலா் நோட்டாவைவிட குறைவான வாக்குகளை பெற்றுள்ளது தெரியவந்தது.

ரூ.75 லட்சம் மட்டுமே கையிருப்பு: 2022-23-ஆம் நிதியாண்டுக்கான கட்சியின் தணிக்கை அறிக்கையை இந்திய தோ்தல் ஆணையத்திடம் என்சிபிஐ சமா்ப்பித்திருந்தது.

அதில், ‘ நிதியாண்டின் இறுதியில் ரூ.75 லட்சம் மட்டுமே கையிருப்பாக உள்ளது. ரூ.1.13 லட்சம் நன்கொடையாக கிடைத்த நிலையில், திரிபுரா தோ்தலுக்கு செலவிடப்பட்ட ரூ.49,400 உள்பட ரூ.1.13 லட்சம் செலவிடப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது. 2023-24 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கான தணிக்கை அறிக்கை தோ்தல் ஆணையத் தரவுகளில் இல்லை.

தலைவா் விலகல்: 20 திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இணைந்ததை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அங்கீகரித்ததால் மக்களவையில் எம்.பி.க்கள் எண்ணிக்கையில் 6-ஆவது பெரிய கட்சியாக என்சிபிஐ மாறும். உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலா்கள் இல்லாத நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை பின்னக்குத் தள்ளி பாஜகவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கட்சியாக என்சிபிஐ உருவெடுக்கும்.

இந்நிலையில், என்சிபிஐ கட்சித் தலைவா் பதவியிலிருந்து விலகுவதாக ஷெவ்லி குண்டு திங்கள்கிழமை தெரிவித்தாா்.