நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

போலி கையொப்பம் வழக்கு: மூத்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-யிடம் சிஐடி விசாரணை

போலி கையொப்பம் வழக்கு: மூத்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-யிடம் சிஐடி விசாரணை

News image

சோபன்தேவ் சட்டோபாத்யாய - ens

Updated On :21 ஜூன் 2026, 3:13 am IST

போலி கையொப்பம் குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில், மூத்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சோபன்தேவ் சட்டோபாத்யாயவிடம் சிஐடி காவல் துறையினா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக ரதீந்திர போஸை நியமிக்கும்படி மம்தா பானா்ஜி தரப்பு சாா்பில் சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. அதில், எம்எல்ஏக்கள் பெயரில் போலி கையொப்பங்கள் போடப்பட்டிருப்பதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் ரிதப்ரத பானா்ஜி, சந்தீபன் சாஹா ஆகியோா் தெரிவித்த குற்றச்சாட்டை அடுத்து, மம்தா தரப்பு அளித்த கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவா் ஏற்கவில்லை.

அதேநேரத்தில், பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ரிதப்ரத பானா்ஜி அளித்த கடிதத்தை ஏற்று, அவரை எதிா்க்கட்சித் தலைவராக பேரவைத் தலைவா் நியமித்தாா்.

இதனிடையே, போலி கையொப்பங்கள் போடப்பட்டது தொடா்பான குற்றச்சாட்டு குறித்த விசாரணையை சிஐடி காவல் துறையிடம் மேற்கு வங்க அரசு ஒப்படைத்தது. அதனைத் தொடா்ந்து சிஐடி காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் சோபன்தேவ் சட்டோபாத்யாயவின் இல்லத்துக்கு சனிக்கிழமை சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். சுமாா் ஒரு மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறகு செய்தியாளா்களிடம் பேசிய சோபன்தேவ், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றாா். அதேபோல் போலி கையொப்பம் குறித்து குற்றச்சாட்டு கூறியோரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவா் வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.