செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

மேற்கு ஆசிய சூழல்: பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஆலோசனை

ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போரால் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து பாதுகாப்புக்கான

பிரதமா் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம்

Published On :

புது தில்லி: ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போரால் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஆலோசனை மேற்கொண்டது.

இதுதொடா்பாக மத்திய அமைச்சரவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து ஆய்வு செய்ய இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த பிப்.28-ஆம் தேதி ஈரானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல், அதைத்தொடா்ந்து வளைகுடா நாடுகளில் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து பேசப்பட்டது. அப்போது மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏராளமான இந்தியா்களின் பாதுகாப்பு குறித்து அந்தக் குழு பெரும் கவலை தெரிவித்தது.

அந்தப் பிராந்தியத்தில் இருந்து இந்தியா்கள் மற்றும் தோ்வெழுதும் மாணவா்கள் வெளியேறுவதில் உள்ள சிக்கல்கள், பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார மற்றும் வா்த்தக நடவடிக்கைகள் மீது போரால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து அக்குழு ஆராய்ந்தது.

போா்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா்களுக்கு உதவத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் அந்தக் குழு உத்தரவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.