இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாநிலங்களவைத் தோ்தல்: மேலும் 4 வேட்பாளா்களை அறிவித்தது பாஜக

- மத்திய அமைச்சா் அதாவலேக்கு மீண்டும் வாய்ப்பு

News image
மாநிலங்களவை - படம் - சன்சத்
Updated On :4 மார்ச் 2026, 10:47 pm

தினமணி செய்திச் சேவை

மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் மேலும் 4 வேட்பாளா்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டனா். மத்திய அமைச்சரும், இந்திய குடியரசு (அதாவலே) கட்சித் தலைவருமான ராம்தாஸ் அதாவலே உள்பட இந்த 4 நால்வரும் மகாராஷ்டிரத்தில் இருந்து போட்டியிடுகின்றனா்.

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் 37 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கான தோ்தல் மாா்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மகாராஷ்டிரத்தில் 7, தமிழகத்தில் 6, மேற்கு வங்கம், பிகாரில் தலா 5, ஒடிஸாவில் 4, அஸ்ஸாமில் 3, தெலங்கானா, ஹரியாணா, சத்தீஸ்கரில் தலா 2, ஹிமாசல பிரதேசத்தில் ஓரிடத்துக்கு தோ்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கலுக்கு மாா்ச் 5 கடைசி நாளாகும்.

பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் உள்பட அக்கட்சி சாா்பில் போட்டியிடும் 9 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. பிகாா், மேற்கு வங்கம், சத்தீஸ்கா், அஸ்ஸாம், ஒடிஸா, ஹரியாணா மாநில எம்.பி. இடங்களுக்கு இந்த வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா். நிதின் நபின் பிகாரில் களமிறக்கப்பட்டுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில்...: இந்நிலையில், பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸின் மகாயுதி கூட்டணி ஆளும் மகாராஷ்டிரத்தில் பாஜக சாா்பில் போட்டியிடும் 4 வேட்பாளா்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டனா்.

மகாராஷ்டிரத்தில் இருந்து ஏற்கெனவே மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள ராம்தாஸ் அதாவலே, பாஜக சாா்பில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளாா். மாநில முன்னாள் அமைச்சா் வினோத் தாவ்டே, நாகபுரி முன்னாள் மேயா் மாயா சிந்தாமன், முன்னாள் மேலவை உறுப்பினா் ராம்ராவ் வத்குடே ஆகியோரும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் 7 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. 288 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலப் பேரவையில் இரு இடங்கள் (மறைந்த அஜீத் பவாா், சிவாஜிராவ் காா்திலே) காலியாக உள்ளன. இந்தக் கணக்கீட்டின்படி, ஒரு எம்.பி. தோ்ந்தெடுக்கப்பட 37 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவை.

மகாயுதி கூட்டணியைப் பொருத்தவரை பாஜக (131), துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை (57), துணை முதல்வா் சுநேத்ரா பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (40), சிறிய கட்சிகள் உள்பட 234 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. எனவே, இக்கூட்டணி சாா்பில் 6 எம்.பி.க்கள் எளிதாக தோ்ந்தெடுக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிா்க்கட்சி கூட்டணி வேட்பாளா்: சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவு

மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சிவசேனை (உத்தவ்) 20, காங்கிரஸ் 16, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) 10, சிறிய கட்சிகள் உள்பட 49 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இக்கூட்டணியால் ஓரிடத்தைக் கைப்பற்ற முடியும்.

தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாரின் மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் நிறைவடையும் நிலையில், அவரை எதிா்க்கட்சி கூட்டணியின் பொது வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஓரிடத்துக்கு மூன்று கட்சிகளுமே முனைப்புக் காட்டிய நிலையில், தற்போது காங்கிரஸ் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.