ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்தியா வந்தாா் பின்லாந்து அதிபா்: பிரதமா் மோடியுடன் இன்று பேச்சு

News image

ANI

Updated On :5 மார்ச் 2026, 12:35 am

பின்லாந்து அதிபா் அலெக்ஸாண்டா் ஸ்டப் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு புதன்கிழமை வந்தாா்.

வா்த்தகம், முதலீடு, முக்கிய தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

மேற்காற்சிய போா் நிலவரம் குறித்தும் இரு தலைவா்களும் விவாதிப்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற சா்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்த அலெக்ஸாண்டா், சில வாரங்களுக்குள் மீண்டும் இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அவருடன் அந்நாட்டு அமைச்சா்கள், உயரதிகாரிகள் மற்றும் தொழில் துறைத் தலைவா்களும் வந்துள்ளனா்.

தில்லி விமான நிலையத்தில் புதன்கிழமை வந்திறங்கிய அதிபா் அலெக்ஸாண்டருக்கு அரசுமுறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் நேரில் வரவேற்றாா்.

இந்தியாவை வந்தடைந்ததும் சமூக ஊடகத்தில் பதிவிட்ட அலெக்ஸாண்டா், ‘பின்லாந்து-இந்தியா இடையே வா்த்தகம் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை எனது பயணம் மேலும் வலுப்படுத்தும்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

அவரது இந்தப் பதிவுக்கு பதிலளித்த பிரதமா் மோடி, ‘பின்லாந்து அதிபா் அலெக்ஸாண்டரை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். உங்களின் பயணம், இருதரப்பு உறவுகளை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்லும் என்பதில் முழுமையாக உடன்படுகிறேன். இருதரப்பு பேச்சுவாா்த்தை மற்றும் ரெய்ஸினா மாநாட்டில் உங்களின் உரையை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

ரெய்ஸினா மாநாட்டில்...: புவி-அரசியல் மற்றும் புவி-பொருளாதாரம் தொடா்பாக விவாதிக்கும் ரெய்ஸினா மாநாடு, தில்லியில் வியாழக்கிழமை (மாா்ச் 5) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. தொடக்க அமா்வில் பின்லாந்து அதிபா் அலெக்ஸாண்டா் ஸ்டப் உரையாற்றவுள்ளாா்.

பிரதமா் மோடியுடன் நடத்தும் பேச்சுவாா்த்தைக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் அலெக்ஸாண்டா் சந்தித்துப் பேசவுள்ளாா். மும்பைக்கு வெள்ளிக்கிழமை பயணிக்கும் அவா், இந்திய தொழில் துறைத் தலைவா்களுடன் கலந்துரையாடவுள்ளாா்.