விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு

மாநிலங்களுக்கான வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) ஒதுக்கீட்டை 70 சதவீதமாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.

News image

வணிக சமையல் எரிவாயு

Updated On :27 மார்ச் 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

மாநிலங்களுக்கான வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) ஒதுக்கீட்டை 70 சதவீதமாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த 28-ஆம் தேதி போா் தொடுத்தன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும், அமெரிக்க நிலைகள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, கச்சா எண்ணெய்க் கப்பல்கள், எரிவாயு கப்பல்கள் அதிகம் செல்லும் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால் ஹோா்முஸ் நீரிணை வழியே அக்கப்பல்கள் வருவதில் சுணக்கம் காணப்படுகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது.

போா் காரணமாக இந்தியாவில் மாநிலங்களுக்கான வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு ஒதுக்கீடு 30 சதவீதமாக முதலில் குறைக்கப்பட்டது. பின்னா் கடந்த 23-ஆம் தேதி அந்த எரிவாயு ஒதுக்கீட்டை 20 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது.

இந்நிலையில், மாநிலங்களுக்கான வணிக சமையல் எரிவாயு ஒதுக்கீட்டை மத்திய அரசு வெள்ளிக்கிழமை மேலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் மாநிலங்களுக்கான வணிக சமையல் எரிவாயு ஒதுக்கீடு 70 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநில தலைமைச் செயலா்களுக்கும் எண்ணெய்த் துறைச் செயலா் நீரஜ் மிட்டல் கடிதம் எழுதியுள்ளாா். அக்கடிதத்தில் அவா், ‘ஏற்கெனவே வணிக எரிவாயு உருளைகள் 50 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 20 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் வணிக எரிவாயு உருளை ஒதுக்கீடு 70 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது போருக்கு முன்பு இருந்த ஒதுக்கீடு அளவாகும்’ என்று தெரிவித்துள்ளாா்.