எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலியாகினர் என்று அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பலியானவர்கள் அருண் குமார் திவாரி மற்றும் சந்தீப் அரே என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிகரத்திலிருந்து கீழே இறங்கும்போது மிகவும் சோர்வடைந்திருந்தனர் என்றும், வழிகாட்டிகள் கடுமையாக முயற்சி செய்தும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் நேபாளத்தின் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரிஷி பண்டாரி கூறினார்.
அரே புதன்கிழமையும், திவாரி வியாழக்கிழமையும் மாலை 5:30 மணியளவில் சிகரத்தை அடைந்ததாகத் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார். பலியான மலையேறுபவர்களின் உடல்களை காத்மாண்டுவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பயணத்தை ஏற்பாடு செய்த பயோனியர் அட்வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் நிவேஷ் கர்கி தெரிவித்தார்.
இதனுடன், இந்த பருவத்தில் எவரெஸ்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. அண்மையில் எவரெஸ்ட் மலையில் மூன்று நேபாள மலையேறுபவர்கள் பலியாகினர். இதனிடையே புதன்கிழமை 8,848. 86 மீட்டர் உயரமுள்ள சிகரத்தை அடைந்த 274 மலையேறுபவர்களில், அரே உட்பட மூன்று இந்தியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Two Indian mountaineers who summited Everest have died while descending, an official said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










