லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் அரவிந்த் கேஜரிவாலுக்கு கொலை மிரட்டல்!
லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் அரவிந்த் கேஜரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றி...

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பெயரில் தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ரூ. 7 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து கொண்டே தனது கூட்டாளிகள் மூலமாகக் குற்றச் செயல்களை இயக்கி வரும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ந்த பல முக்கியக் கொலைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
இதனிடையே, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பெயரில் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்படுவது வழக்கமாக மாறியுள்ளது.
இந்த நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பெயரில் தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது மகள் ஹர்ஷிதா கேஜரிவால் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மொஹாலி காவல் கண்காணிப்பாளரிடம் திலக் நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜர்னைல் சிங் கடந்த நவ. 6 அன்று புகார் அளித்துள்ளார்.
அதில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் உறுப்பினர் எனக் குறிப்பிட்டு தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்ஆப் செய்திகள் மூலம், ரூ. 7 கோடி பணம் கொடுக்கப்படாவிட்டால் அரவிந்த் கேஜரிவாலும், அவரது மகளும் கொலை செய்யப்படுவார்கள் என்று மிரட்டல் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பி.என்.எஸ். மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதே நாளில், தில்லியின் நிஹால் விஹாா் பகுதி தனியாா் மருத்துவமனை ஒன்றின் உரிமையாளருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடா்புடையதாகக் கூறி மா்ம நபா் ஒருவா் ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
Summary
Death threat against Arvind Kejriwal in the name of Lawrence Bishnoi!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


