டெலிவரி ஊழியர்களுடன் இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்ற ராகுல்!
ஹைதராபாத்தில் டெலிவரி ஊழியர்களுடன் வாகன பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி..

ஹைதராபாத்தில் ராகுல் பேரணி
ஹைதராபாத்தில் டெலிவரி ஊழியர்களுடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்றார்.
நகரின் தகவல் தொழில்நுட்ப மையப்பகுதியான மாதபூரில் உள்ள ஷில்பரமம் அரங்கிலிருந்து தொடங்கி ஜெயபேரி மைதானம் வரை இந்தப் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணியின்போது ராகுல் காந்தி இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றார்.
இருசக்கர வாகன பேரணிக்குப் பிறகு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, டெலிவரி ஊழியர்களுடன் உரையாற்ற உள்ளார். அவர்களுக்கான மாநில அரசின் நலத்திட்டங்களை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
ராகுல் காந்தி தனது 'பாரத ஒற்றுமை யாத்திரையின்போது டெலிவரி ஊழியர்களின் பிரச்னைகளை எடுத்துரைத்ததைத் தொடர்ந்து, மாநில அரசு இந்த ஆண்டு மார்ச் மாதம் தெலங்கானாவைச் சார்ந்த டெலிவரி ஊழியர்களுக்கு (பதிவு, சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்) மசோதாவை இயற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


