வேலைகளில் மட்டுமல்ல... தேர்வுகளிலும் மூக்கை நுழைக்கும் ஏஐ! ஸ்மார்ட் கண்ணாடி மூலம் மோசடி!தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

அக்வான் புயல்! ஒடிசாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

ஒடிசாவில் கடற்கரை சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி..

sea

அக்வான் புயல் - பிரதிப் படம்

Updated On :

வங்கக் கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் காரணமாக, ஒடிசா அரசு கடற்கரை சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

இந்தத் தீவிர புயலானது மணிக்கு 100-110 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 120 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் வகையில் வலுப்பெற்றுள்ளது. இது, நவம்பர் 20-ஆம் தேதி நண்பகல் ஆந்திரத்தின் நெல்லூர் - விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால் ஒடிசாவிலும் பலத்த காற்று வீசக்கூடும். வியாழக்கிழமை வேகம் மணிக்கு 40-50 கி.மீ ஆகவும், அடுத்தடுத்த நாள்களில் 50-60 கி.மீ ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நவம்பர் 18 இரவு முதல் 21-ஆம் தேதி வரை கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படும்.

வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஒடிசாவின் சிறப்பு நிவாரண ஆணையர் ராஜேஷ் பி. பாட்டீல், சுற்றுலாத் துறையின் ஆணையர் மற்றும் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

கடல் சீற்றம், பலத்த காற்று, கனமழை மற்றும் கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள், சுற்றுலாத் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பது அவசியமாகும்.

பாதிக்கப்படக்கூடிய கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகள், பொழுதுபோக்குச் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு, சுற்றுலாத் துறை அதிகாரிகள், சுற்றுலா நிறுவனங்கள், உணவகங்கள், ரிசார்ட்டுகள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருக்கு அறிவுறுத்துமாறு சுற்றுலாத் துறையைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிலைமை நீராகும் வரை படகு சவாரி, நீர் விளையாட்டுகள், சுற்றுலாப் படகுப் பயணங்கள், கடல் சார்ந்த பிற சுற்றுலா நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பற்ற கடற்கரைகளை, கடல் ஓரங்கள், படகுத் துறைகள் மற்றும் கடற்கரையையொட்டிய பகுதிகளில் பொதுமக்கள் செல்வதைத் தடுக்குமாறும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவகங்களில் தங்கியுள்ளோருக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். அவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். அவசரக் காலத் தொடர்புகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களைத் தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ள எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்படும் வரையிலும், சூழல் பாதுகாப்பானது என மாவட்ட நிர்வாகம் சான்றளிக்கும் வரையிலும் இவை தொடரும் என்று அந்த கடிதத்தில் மாநில நிவாரண ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.