அக்வான் புயல்! புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்!
புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிர்வாகம் விடுத்த கட்டுப்பாடுகள் பற்றி..

புரி ஜெகந்நாதர் கோயில் - file photo
ஒடிசா கடற்கரையை நோக்கி 'அக்வான்' தீவிர புயல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து, புரி ஜெகந்நாதர் கோயில் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் ஒடிசாவில் கரையைக் கடக்கவுள்ள நிலையில், ஒடிசாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகந்நாதர் கோயில் தொடர்ந்து திறந்திருக்கும், அங்கு தினசரி வழிபாட்டுச் சடங்குகள் வழக்கம்போல நடைபெறும் என கோயில் நிரவாகம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, புரியில் உள்ள ஸ்ரீ குண்டிச்சா கோயில் நவம்பர் 19 முதல் 21 வரை மூடப்பட்டிருக்கும்.
இதுதொடர்பாக ஸ்ரீ ஜெகன்னாதர் கோயில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி அரவிந்த பதி கூறுகையில்,
தீவிர புயல் 'அக்வான்' காரணமாக நிலவும் வானிலை சூழல் மற்றும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பக்தர்கள் தங்கள் வருகையைத் திட்டமிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
ஸ்ரீ ஜெகந்நாதர் நம் அனைவரையும் காத்து, ஆசிர்வதிப்பாராக என்று அவர் சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புயல், ஆந்திரப் பிரதேசத்தின் நர்சாபூர் மற்றும் ஒடிசாவின் புரிக்கு இடையே கடற்கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புரியில் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய மண்டல காவல்துறை ஐஜிபி சத்யஜித் நாயக் தெரிவித்தார்.
கோனார்க்கில் உள்ள சந்திரபாகா கடற்கரை, சிலிகா ஏரி, அஸ்தரங்கா கடற்கரை மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற சுற்றுலாத் தலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், புவனேஸ்வரில் உள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்கா மற்றும் அதனையொட்டியுள்ள மாநில தாவரவியல் பூங்கா ஆகியவை நவ. 19, 20 ஆகிய தேதிகளில் பார்வையாளர்களுக்காக மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பிதர்கனிகா தேசிய பூங்காவும் நவ. 21 வரை மூன்று நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

