மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்தது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? மு.க. ஸ்டாலின் கேள்விகார்த்திகை தீபம்! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தாமிரக் கொப்பரை!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! விசாரணை நவ. 27-க்கு ஒத்திவைப்பு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை!யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

நவீன் பட்நாயக் வெளிநாட்டுப் பயண விவரங்கள் குறித்து பாஜக கேள்வி

நவீன் பட்நாயக் வெளிநாட்டுப் பயண விவரங்களை வெளிப்படையாக வெளியிட பாஜக கோரிக்கை...

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்

Updated On :

முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தனது வெளிநாட்டுப் பயணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த குற்றச்சாட்டுகளைப் பொய்யானவை என நிராகரித்த நவீன் பட்நாயக், தகுந்த நேரத்தில் இதற்கான பதில் அளிக்கப்படும் என்று கூறிய மறுநாளே, பாஜக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

பாஜக வெளியிட்ட சமூக ஊடகப் பதிவொன்றில்,

நவீன் பட்நாயக்கின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தாங்கள் கேள்வி எழுப்பவில்லை, ஆனால் அந்தப் பயணங்களுக்காகச் செலவிடப்பட்ட தொகை குறித்து விளக்கம் தேவை என்று பாஜக குறிப்பிட்டுள்ளது.

மேலும், பாஜக ஐந்து கேள்விகளை முன்வைத்துள்ளது. அதில், மாநிலத்தின் நலனுக்காக அவர் ரோமில் என்ன பணிகளை மேற்கொண்டார், அவரது பயணம் குறித்து இந்தியத் தூதரகத்திற்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை, ஒடிசா சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் இருக்கும்போது ஏன் தனியார் நிறுவனம் பணியமர்த்தப்பட்டது, மேலும், பயணச் செலவுகள் குறித்த அரசு ஆவணங்களுக்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களுக்கும் ஏன் முரண்பட்டுள்ளது போன்ற கேள்விகள் அடங்கும்.

மேலும், இந்தச் செலவுகள் மாநில அரசுப் பெட்டகத்திலிருந்து (அரசு நிதியிலிருந்து) மேற்கொள்ளப்பட்டனவா என்றும் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பிஜேடி செய்தித் தொடர்பாளர் லெனின் மொஹந்தி, ஜூன் 2022-ல் 'உலக உணவுத் திட்டம்' மற்றும் ரோமில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவுகளைப் பகிர்ந்துள்ளார். இவை, இத்தாலி பயணத்தின் போது பட்நாயக் மேற்கொண்ட நிகழ்வுகளை உறுதிப்படுத்துகின்றன.

உலக உணவுத் திட்டத்தின் பதிவில், நவீன் பட்நாயக்கை வரவேற்றதோடு, 'பசி இல்லா மாநிலம்' மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஒடிசாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோமில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மற்றொரு பதிவில், இத்தாலியின் தலைநகருக்கு வருகை தந்த அப்போதைய முதலமைச்சரை, தூதர் நீனா மல்ஹோத்ரா வரவேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-ல் டோக்கியோவில் நடைபெற்ற ஒடிசா வணிகச் சந்திப்பில் பட்நாயக் கலந்துகொண்டதாகக் கூறிய மொஹந்தி, இந்த நிகழ்வு மாநில அரசு, ஜப்பானுக்கான இந்தியத் தூதரகம், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு மற்றும் எஃப்ஐசிசிஐ ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜப்பானின் சுமார் 200 முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மேலும், ஜப்பானில் நடைபெற்ற கூட்டங்களில் பட்நாயக் பங்கேற்றதைக் காட்டும் புகைப்படங்களையும் பிஜேடி வெளியிட்டுள்ளது.

பிஜேடி வெளிப்படைத்தன்மையை மதிக்கிறது. தகவல் அறியும் உரிமையைப் போற்றுகிறது. ஏனெனில், அனைத்தையும் தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு.

மேலும், சுயநல நோக்கங்களைக் கொண்ட சில தனிநபர்கள் பரப்பும் போலியான, தவறான மற்றும் தீய உள்நோக்கம் கொண்ட கருத்துகளை பிஜேடி வன்மையாகக் கண்டிக்கிறது என்று மொஹந்தி தெரிவித்தார்.

ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பட்நாயக் மற்றும் அவரது அதிகாரிகள் இருவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணை நடத்த நவம்பர் 21 அன்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.